பொன்மலை சுதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம்- 42 வது ஆண்டு நிறைவு விழா

Aug 6, 2026 - 21:29
 102
பொன்மலை சுதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம்- 42 வது ஆண்டு நிறைவு விழா

பொன்மலை சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம்

42-வது ஆண்டு நிறைவு விழா 

திருச்சி,

பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழாவும் மற்றும் 2025-26 ஆம் ஆண்டின் பொது மகாசபைக் கூட்டம்சங்கதலைவர்டி.எஸ்.கணேஷ் தலைமையில் நடந்தது. இதில் செயல் தலைவர் வெங்கடேசன், இனண செயலாளர்கள் பழனிவேல், சம்பந்தம், கருப்பையா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில்ராமசாமிஅனைவரையும்வரவேற்றார்.தொடர்ந்துஆண்டறிக்கை வாசித்தார். வரவு, செலவு கணக்குகளைபொருளாளர்எம்.மகேந்திரன் வாசித்தார். விழாவிற்கு பொன்மலைரயில்வேபணிமனைஉயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.உதவி செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். கொரோனாதொற்று காலத்தில் 01-07-2020-ல் இருந்து 30-06-2021 வரை18 மாதகாலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டநிலுவைத் தொகையைஉடனடியாகவிடுவித்து அனைவருக்கும் வழங்க வேண்டும், 50%படியைஓய்வூதியத்துடன்இணைத்து அடிப்படை ஓய்வூதியமாக வழங்கவேண்டும்,தற்சமயம்வழங்கப்படும்FMAரூ.1000என்பதனைரூ.5000ஆக உயர்த்தி வழங்க வேண்டும், FMA-ஐ அனைத்து ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் இரயில்வே ஊழியர்களுக்கும்குடும்பஓய்வூதியம்பெறுபவர்களுக்கும்எவ்விதநிபந்தனையுமின்றி, பாரபட்சமில்லாமல் வழங்க வேண்டும்,வெளி நோயாளிப் பிரிவில் ஓய்வுபெற்ற அனைவருக்கும்,குடும்பஓய்வுதியர்களுக்கும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும்.மருத்துவப் படியுடன் கூடிய வெளிநோயாளிப் பிரிவிலும் உள் நோயாளிப் பிரிவிலும் மருத்துவ வசதிகள் அளிக்கவேண்டும்,65,70 மற்றும் 75 வயதுஉள்ளஅனைத்துஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் முறையே 5%, 10% மற்றும் 15% அதிகப்படிஓய்வூதியம்பார்லிமென்டரிகமிட்டிசிபாரிசுபடிவழங்கவேண்டும்,கம்யூடேஷன்தொகைபிடித்தத்தை 15 வருடத்தில்இருந்து10வருடம் 8 மாதமாக குறைத்து 10 வருடம் 8 மாத முடிவில் முழு ஓய்வூதியம் வழங்கவேண்டும்,குடும்பஓய்வூதியத்தை 30% லிருந்து 40%ஆகஉயர்த்தி வழங்க வேண்டும்,ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி விலக்கு அளித்து, அவர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்துவருமானவரிப் படிவம் சமர்ப்பிப்பதிலிருந்தும் விலக்களிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் முன்பு அளித்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,வங்கிகள்அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் சான்றிதழ் (Life Certificate) அளித்ததற்கான ஒப்புதல் சான்று (Acknowledgement) வழங்க வேண்டுகம், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவிற்கு அப்துல்அலீம்,ஐனார்த்தனராஜீ,சண்முகம், கேசவன், நமசிவாயம், முருகானந்தம், கே.சி.நீலமேகம், பழனிச்சாமி, இராமச்சந்திரன், பொன்னுதுரை, சாம்சன் போஸ், ஸ்ரீதரன் உள்ளிட்ட 300 மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் உதவி செயலாளர் ஏ.வைகுண்ட முர்த்தி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0