திருச்சியில் பறவைகள் தொண்டு நிறுவனம், மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பில் ஐம்பெரும்விழா மாணவர்களுக்குகவிஞர்முல்லைப்பாண்டியன்பரிசளிப்பு

Oct 29, 2026 - 11:22
Oct 29, 2026 - 11:24
 8
திருச்சியில் பறவைகள் தொண்டு நிறுவனம்,   மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பில்  ஐம்பெரும்விழா   மாணவர்களுக்குகவிஞர்முல்லைப்பாண்டியன்பரிசளிப்பு

திருச்சியில் பறவைகள் தொண்டு நிறுவனம் மற்றும்

 மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பில்ஐம்பெரும்விழா

மாணவர்களுக்குகவிஞர்முல்லைப்பாண்டியன்பரிசளிப்பு 

திருச்சி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள், அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், உலக போலியோ தினவிழா மற்றும் மாணவர் தினவிழா நடைபெற்றது. வழக்கறிஞர் கர்ணன் தலைமை வகித்தார். அப்துல்கலாம் படத்தை திறந்து வைத்து முனைவர் கீதாதயாளன் சிறப்புரையாற்றினார். தமிழ்ச்செம்மல் இராசஇளங்கோவன் மகாத்மாகாந்தி படத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் படத்தை கவிஞர் இரா.துரைமுருகன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் நாட்டின் சுதந்திரத்திற்கு மகாத்மாகாந்தி கஷ்டப்பட்டதைப்போல தினமலர் நாளிதழை நிறுவனர் ராமசுப்பையர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் பத்திரிகையை கேரளாவில் ஆரம்பித்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார். தனக்கு ஏற்பட்ட தடைகற்களை படிகற்களாக மாற்றினார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமின்றி தமிழர்கள் வசிக்கும் 80க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு தினமலர் செல்கிறது. அங்கெல்லாம் டி.வி.ராமசுப்பையர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாகர்கோவில், கன்னியாகுமரி வரை ரயில்பாதை ஏற்படுத்துவதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர். நேர்மையாக மத்திய அரசுடன் மோதினார். அவரது தொடர் முயற்சியின் விளைவாக நாகர்கோவில்-கன்னியாகுமரி-திருநெல்வேலிக்கும் ரயில் கொண்டு வரப்பட்டது. அதேபோல் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டார். குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரியை தமிழ்நாட்டில் இணைக்க போராட்டங்களில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின் வெற்றியாக கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. நாட்டிற்காக அரும்பணி செய்த மாமனிதர் டி.வி.ராமசுப்பையருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என துரைமுருகன்பேசினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கவிஞர் முல்லைப்பாண்டியன் பரிசளித்து சிறப்புரை நிகழ்த்தினர். இதில் கவிஞர் மற்றும் திரைப்பட உதவி இயக்குநர் சகுந்தலா தங்க வேல், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு ரொட்டேரியன் கார்த்திகேயன் விருது வழங்கி பேசினார். முடிவில் பறவைகள் தொண்டு நிறுவன அமைப்பாளர் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0