திருச்சியில் நடந்தது சிற்பி தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

Oct 26, 2026 - 23:54
 117
திருச்சியில் நடந்தது   சிற்பி தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு
திருச்சியில் நடந்தது   சிற்பி தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

திருச்சியில் நடந்தது

சிற்பி தொண்டு நிறுவனம் சார்பில் 

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு 

திருச்சி,

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் இயங்கி வரும் சிற்பி டிரஸ்ட் அலுவலகத்தில் நமது சேலத்தில் இயங்கி வரும் ஏஎஸ்ஜெஎப் வழிகாட்டுதல் படி Infinite seva மூலம் SBI -CSR ல் நமது நிறுவனத்தில் உள்ள வாழ்வாதாரத்தில் பின்தங்கி உள்ள பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் வெள்ளனூர் ஊராட்சியை சேர்ந்த மோகனாம்பாள் வரவேற்றார்.இந்நிகழ்வில் திருச்சி பிஎச்இஎல் சிட்டி ரோட்டரி கிளப் சேர்மன்பி.சந்திரசேகர் அவர்கள் மற்றும் டிஆர்எல்எம் திருச்சி மாவட்ட சங்க செயலாளர் பொன்.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து சிற்பி தொண்டு நிறுவன இயக்குனரும், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முதன்மை பயிற்றுநர் ஆனந்தி அவர்கள் நிறுவனத்தின் இன்றைய மற்றும் நாளைய செயல்பாடுகள் குறித்தும் பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையடனும் வாழ்க்கையினை எதிர்கொள்ள வேண்டும் என்று பேசினார். நிறைவாக கோமாகுடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பயிற்றுனருமான லதா மகேஸ்வரி  நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0