திருச்சியில் முற்றிலும் பெண் மருத்துவர்களால் நடத்தப்படும் மார்பக ஆரோக்கிய மையம் மா காவேரி தொடங்கியது

Oct 14, 2026 - 12:09
 166
திருச்சியில் முற்றிலும் பெண் மருத்துவர்களால் நடத்தப்படும் மார்பக ஆரோக்கிய மையம் மா காவேரி தொடங்கியது
திருச்சியில் முற்றிலும் பெண் மருத்துவர்களால் நடத்தப்படும் மார்பக ஆரோக்கிய மையம் மா காவேரி தொடங்கியது

திருச்சியில் முற்றிலும் பெண் மருத்துவர்களால் நடத்தப்படும்

மார்பக ஆரோக்கிய மையம் மா காவேரி தொடங்கியது 

திருச்சி,

இப்புதிய சிகிச்சை மையத்தின் சிறப்பு வசதிகள் குறித்து மா காவேரி மருத்துவமனை சமீபத்தில் 'வாங்க அம்மா கிட்ட பேசலாம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. திருச்சி, அக்டோபர் 10, 2026: மார்பக ஆரோக்கியம் குறித்து எவ்வித தயக்கமும் இன்றி பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறும் வகையில், முற்றிலும் பெண் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களால் நடத்தப்படும் 'காவேரி பிரெஸ்ட் கிளினிக்' என்ற சிறப்பு மையத்தைத் திருச்சி மா காவேரி மருத்துவமனை தொடங்கியது. இந்த மையத்தை நடிகை கௌதமி திறந்து வைத்தார். மார்பக ஆரோக்கியத்திற்காக நிபுணர்களின் ஆலோசனை, பரிசோதனை, பயாப்ஸி மற்றும் சிகிச்சைகள் பெறுவதற்கு பெண்கள் பல மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடவேண்டியுள்ளது. இதனால் அறிகுறிகளுக்கான காரணத்தைத் தெரிந்து கொள்வதில் தாமதமும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. மேலும், பல பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் தங்கள் மார்பக பிரச்சனைகள் குறித்து பேசவோ அல்லது பரிசோதனை செய்து கொள்ளவோ தயங்குவதால், அவர்கள் மருத்துவ உதவியை தள்ளிப்போடும் நிலை ஏற்படுகிறது. இந்த நிதர்சன உண்மைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து, மதிப்பீடு, சிகிச்சை மற்றும் தொடர் ஆதரவை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கத்திற்காக காவேரி மார்பக மையம் தொடங்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, ஒவ்வொரு பயணமும் முக்கியமானது" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் 2026 அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் காவேரி பிரெஸ்ட் கிளினிக் தொடங்கப்படுகிறது. இந்நிகழ்வில் பேசிய மா காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன், “ஆலோசனை, ஸ்கேன் அல்லது பயாப்ஸி பரிசோதனைகளுக்காக பெண்கள் பொதுவாக ஒரு மருத்துவரிடம் இருந்து மற்றொரு மருத்துவருக்கு, ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்குபல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டியிருக்கிறது; இதில் நோய்க்கான தெளிவான விடைக்காகக் காத்திருப்பதே மிகவும் கடினமான பகுதியாக உள்ளது. அது போல் தனது மார்பக ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும், தாமதமின்றி தெளிவான பதில்களை பெறவும் முடியாத நிலை இருக்கிறது. காவேரி பிரெஸ்ட் கிளினிக் இந்நிலையை மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. கட்டியைக் கண்டு கவலைப்படும் பெண்ணாக இருந்தாலும், தனக்கு மரபு வழியில் புற்றுநோய் வரும் அபாயயம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பும் பெண்ணாக இருந்தாலும், மார்பில் வலி அல்லது திரவ கசிவுக்காக பரிசோதனை செய்ய நினைக்கும் அல்லது சீரமைப்பு மற்றும் அழகு சார் சிகிச்சைகளை வேண்டும் பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு சரியான தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சைகளை பெண் மருத்துவர்களை கொண்டே வழங்கும் மையமாக காவேரி பிரெஸ்ட் கிளினிக் செயல்படும்," என்றார். காவேரி பிரெஸ்ட் கிளினிக் ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் பரிசோதனைகள், ஆபத்தில்லாத மார்பகக் நோய்களுக்கான மதிப்பீடு மற்றும் சிகிச்சை, மரபணு சார்ந்த அபாய மதிப்பீடு, மார்பகச் சீரமைப்பு அறுவை சிகிச்சைகள், அழகு சார் சிகிச்சைகள், மற்றும் மனோதத்துவ ஆதரவு ஆகியவற்றுடன் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளையும் முழுமையாக வழங்குகிறது. மார்பக அறுவை சிகிச்சை, ரேடியாலஜி, பேத்தாலஜி, ஆன்காலஜி, மகப்பேறியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகளை சேர்ந்த முற்றிலும் பெண்களே வழிநடத்தும் மருத்துவக் குழுவினர் இச்சிகிச்சையில் வழங்குகின்றனர். இது நோயாளிகள் தங்கள் உணர்வுப்பூர்வமான கவலைகளை வெளிப்படுத்தவும், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பயமின்றி, சௌகரியமான சூழலில் பெறவும் வழிவகுக்கும். திருச்சி காவேரி மருத்துவமனையின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.மேகா பேசும்போது : "பயம், தயக்கம் அல்லது கூச்சம் காரணமாக மார்பக ஆரோக்கியத்தை பல பெண்கள் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஒரு சௌகரியமான மற்றும் ஆதரவான சூழல் இருந்தால் அது பெண்கள் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெற வழிவகுக்கும். இத்தகைய சூழலை காவேரி பிரெஸ்ட் கிளினிக் வழங்குகிறது. எங்கள் பெண் மருத்துவர்கள் குழு, ஒவ்வொரு நோயாளியும் தன்னம்பிக்கையுடன் தங்கள் சந்தேகங்களை தெரிவிக்கவும், அவர்களுக்கான சிகிச்சைகளைப் புரிந்து கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0