தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு 2026-27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை

Oct 20, 2026 - 19:25
Oct 20, 2026 - 19:46
 151
தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு 2026-27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை

தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

 விஜயதசமியை முன்னிட்டு 2026-27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை

திருச்சி 

திருச்சி , உறையூரில் அமைந்துள்ள தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி வித்யாரம்பம் விழாவை முன்னிட்டு 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி செயலாளர்  பி.நீல்ராஜ் தலைமை ஏற்று மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார் . மேலும் பள்ளியில் முதன் முதலாக சேர்ந்த குழந்தைகளுக்கு செயலாளர் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். நம் பாரம்பரிய முறைப்படி வித்யாரம்பம் விஜயதசமி விழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைப்பிடித்து தாய்மொழியான தமிழில் ‘அ’ மற்றும் 'ஓம்'எழுதி குழந்தைகளின் கல்வியை சிறப்புடன் தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் , துணை முதல்வர் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0