இயற்கை வளம் மக்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தல் மரம் மற்றும் மண்ணின் வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி திருச்சிக்கு வந்தடைந்த ''தாய் மண்ணே வணக்கம்'' பாதயாத்திரை குழு

Oct 30, 2026 - 21:18
 8
இயற்கை வளம் மக்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தல் மரம் மற்றும் மண்ணின் வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி திருச்சிக்கு வந்தடைந்த ''தாய் மண்ணே வணக்கம்'' பாதயாத்திரை குழு

இயற்கைவளம்,மக்கள்வாழ்வாதாரம் மேம்படுத்தல்,

மரம்மற்றும்மண்ணின்வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி 

திருச்சிக்கு வந்தடைந்த தாய் மண்ணே வணக்கம் பாதயாத்திரை குழு

திருச்சி, 

திருச்சிக்கு வந்தடைந்த “தாய் மண்ணே வணக்கம்” யாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு!இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண்ணின் வளத்தையும் மரங்களின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் நடைபெற்று வரும் “தாய் மண்ணே வணக்கம்” யாத்திரைக் குழுவினர் இன்று திருச்சிக்கு வருகை தந்தனர். அவர்களை KRG Foundation சார்பில் ராஜகோபால், தண்ணீர்அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், முசிறி பசுமை சிகரம் விதைகள் அமைப்பின்யோகநாதன்ஆகியோர் வரவேற்றனர்.இயற்கைவேளாண்மை, மரம் வளர்ப்பு, மண் வளப் பாதுகாப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் கிராமங்களின்தன்னிறைவு ஆகியவற்றின்அவசியத்தைமக்களிடம்எடுத்துரைக்கும்இந்தயாத்திரை, இயற்கையோடு இணைந்த வாழ்வியலை வலியுறுத்துகிறது. மண்ணையும் இயற்கையையும் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமை என்பதை வலியுறுத்தும் இந்தப் பயணம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0