தீபாவளி பண்டிகையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சார்பில் என்.எஸ்.பி.சாலையில்தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா திறந்து வைத்து, பார்வையிட்ட காட்சி.

Oct 31, 2026 - 23:18
Oct 31, 2026 - 23:22
 58
தீபாவளி பண்டிகையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சார்பில் என்.எஸ்.பி.சாலையில்தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா  திறந்து வைத்து, பார்வையிட்ட காட்சி.
தீபாவளி பண்டிகையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சார்பில் என்.எஸ்.பி.சாலையில்தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா  திறந்து வைத்து, பார்வையிட்ட காட்சி.

திருச்சி என் எஸ் பி சாலையில் தற்காலிக காவல் உதவி மையம்

திறப்பு தீபாவளி திருடர்களை கண்காணிக்க 152 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

மாநகர போலீஸ் கமிஷனர் தகவல் திருச்சி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் என்.எஸ்.பி.சாலையில் தெப்பக்குளம்அருகேஅமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா திறந்து வைத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தீபாவளி நேரத்தில் குற்ற நடத்தை உடைய நபர்களை கண்காணிக்க தெப்பக்குளம், என்.எஸ். பி.சாலை புறக்காவல் நிலையம், மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் அதிநவீன சுழலும் பிடி இசட் கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளது. அதேபோல் காந்திமார்க்கெட் ஆர்ச், பெரிய கடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்தி கோவில் தெரு, மேலபுலிவார்டு ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 152 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்ற நடத்தைக்காரர்களை, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குரிய மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அவற்றை இயக்குவதற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழா வண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாகவும், புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மானிட்டர்கள் மூலமாகவும், நாள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டம் நிறைந்த பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள காவலர்கள் எப்ஆர்எஸ் செயலி மூலம் சந்தேக நபர்களை முக அடையாளங்களை சரிபார்த்து, கெட்ட நடத்தைகார்களின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கடைவீதி பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைக்கவேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்களாக இருந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு என மொத்தம் சுமார் 200 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றி கடைவீதிக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடித்து, பொதுமக்கள் காவல்துறையினருக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும் இவ்வாறு போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா கூறினார்.பேட்டியின் போது துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0