திருச்சி ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் புதிய ரோட்டரி கிளப் தொடக்கம்

Oct 29, 2026 - 21:58
Oct 29, 2026 - 22:30
 96
திருச்சி ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் புதிய ரோட்டரி கிளப் தொடக்கம்
திருச்சி ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் புதிய ரோட்டரி கிளப் தொடக்கம்

திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில்

 புதிய ரோட்டரி கிளப் தொடக்கம்

திருச்சி

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் அருகிலுள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கேன்சர் கேர் என்ற பெயரில் புதிய ரோட்டரி கிளப் துவங்கப்பட்டது. பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகாலக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொடர்பான பொதுச் சேவைகளை விரிவுபடுத்தவும், மருத்துவமனையின் முன்னெடுப்பில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து இந்த கிளப் தொடங்கப்பட்டுள்ளது. . ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சென்ட்ரல் இந்தப் புதிய கிளப்பிற்கு ஆதரவளித்து, அதன் ஸ்பான்சர் கிளப்பாகச் செயல்பட்டுள்ளது. இதற்கான சார்ட்டர் நிறுவும் விழா ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.பி.எஸ் மணி தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சென்ட்ரல் தலைவர் டாக்டர் பிரபாகரன் மற்றும் செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கேன்சர் கேர் கிளப் தலைவராக டாக்டர் சசிப்ரியா, செயலாளராக டாக்டர் சுகிர்தா, துணைத் தலைவராக டாக்டர் மரியா ஜினியோ, பொருளாளராக டாக்டர் மல்லிகா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தல், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்துதல், புற்றுநோய் தடுப்பு குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், பொதுமக்களுக்கான மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல், தேவையுள்ள மக்களுக்கு புற்றுநோய் தொடர்பான மருத்துவச் சேவைகள் கிடைக்க உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப் பணிகளில் இக்கிளப் ஈடுபட உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0