புதுச்சேரி கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுக்க வேண்டும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அறிக்கை

Oct 27, 2026 - 00:38
 3
புதுச்சேரி கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை  தடுக்க வேண்டும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அறிக்கை

புதுச்சேரி கடலில் பிளாஸ்டிக் பொருள்கள் கலப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும்

 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அறிக்கை

 புதுச்சேரி,

புதுச்சேரி திமுக மாநில துணை அமைப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :. புதுச்சேரி கடல் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை பொருள்கள் அதிக அளவுக்கு கலக்கின்றன. சமீபத்தில் மீனவர்களின் வலைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் முதலான பொருள்கள்தான் கிடைத்தன. மீன்கள் கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகப்படுத்தி இருக்கிறோம். அத்துடன் அதை முறையாக குப்பைத் தொட்டிகளிலும் போடுவதில்லை. சுற்றுலா வருவோரிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று மீனவர்களுக்கு மீன் கிடைக்கவில்லை. நாளை சூழலே கெட்டு நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அரசு இதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். கடலுக்குச் செல்லும் வடிகால் வாய்க்கால்களின் இறுதியில் வலைகளைக் கட்டி பிளாஸ்டிக் பொருள்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன். 2 மணி நேர மழைக்கே புதுச்சேரி நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி விட்டது. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ரெயின்கோட், குடையுடன் வெளியே செல்லுங்கள். பாதுகாப்பான தண்ணீரை குடியுங்கள். வட கிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை இருந்து மக்களைக் காக்க என்ஆர்-பாஜ அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அனிபால் கென்னடி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0