திருச்சியில் நடந்தது, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Sep 29, 2026 - 12:10
 3
திருச்சியில் நடந்தது, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் நடந்தது

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி ,

 நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெய் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமாரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவா, அமைப்பு பொதுச் செயலாளர் ரத்தினசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தலைவர் முருகேசன் விருதுநகர் மாவட்ட செயலாளர் வினோத் சேலம் மாவட்ட தலைவர் சுடலைமுத்து பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலாளர் வசந்தகுமார் புதுக்கோட்டை மாவட்ட பொது செயலாளர் அசோக்குமார் புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட மாநில மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெய வீரபாண்டியன் செய்தியாளர்களும் கூறுகையில்: இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் எங்களது முக்கிய நோக்கமாகும். போதை கலாச்சாரத்தால் ஏராளமான இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருவதுடன், பெண்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி, மிகப்பெரிய சக்தியாக உருவாக்கும் பணியை நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால் ஆட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொண்டு அவற்றை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டும், மக்கள் முன் வக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0