அதிமுக சார்பில் தஞ்சையில் நடைபெறவுள்ள கட்டண ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வருகை தரும் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்க தீர்மானம் நிறைவேற்றம்
அதிமுக சார்பில் தஞ்சையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
திருச்சி வருகைதரும் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்க தீர்மானம்.
திருச்சி,
அதிமுக கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்பாக திருச்சி வழியாக தஞ்சை செல்லும் பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஶ்ரீரங்கம் சந்திரா நகரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் டி.என்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.பாலன் , மாவட்ட இணைச் செயலாளர் ரீனா செந்தில், பொன்னி சேகர், ஐடி விங் மண்டல தலைவர் சாய் சுரேஷ் குமார், , ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் விடிஎம்.நேரு, முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் அன்பில் தர்மதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், பகுதிச் செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணியன், தாளக்குடி விஜய், விடிஆர்.மாரீஸ், பொதுக் குழு சாந்தி,திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழக (லால்குடி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி) மாவட்ட கழக, ஒன்றிய, நகர,பேரூர்,பகுதி கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0