திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா 492 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்

Oct 6, 2026 - 23:18
 3
திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா 492 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா 492 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா

492 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் எஸ்.ரமேஷ் சீர்வரிசை பொருட்கள் வழங்கினார் 

திருச்சி,

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கத்தில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தலைமை வகித்தார். தமிழகஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்எஸ்.ரமேஷ்கலந்துகொண்டு 492 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டு, தாய், சேய் நலன் பேறு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினார். விழாவில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக், எம்எல்ஏக்கள் நவல்பட்டு விஜி, ஆர். கதிரவன், எம். விக்னேஷ், மாநகராட்சி ஆணையர் பொன்மணி, கோட்டாட்சியர் சாலை தவளன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் மா.நித்தியா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இரா. பரிமளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0