திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் ஓவியக் கண்காட்சி தமிழின் தொன்மையை ஓவியமாக வரைந்திருந்தனர்.
திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் ஓவியக் கண்காட்சி
தமிழின் தொன்மையைஓவியமாக வரைந்திருந்தனர்
திருச்சி
திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஓவியக் கண்காட்சி ச இன்று முதல் 3 நாட்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஒட்டலில் தொடங்கியது “செந்தமிழ்ச் செவியில் சித்திரத்தின் திரையில்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழின் தொன்மையான இலக்கியப் பாடல்கள் தொடங்கி இன்றைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரை இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க வரிகளின் கருத்துகளும், உணர்வுகளும் மாணவர்களின் கற்பனைத் திறன் மூலம் ஓவியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியக்கண்காட்சியில் சுமார் 40 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 156 ஓவியப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். பாலேட் நைப் பெயிண்டிங், அக்ரிலிக், ஆயில் பெயிண்டிங், போஸ்டர் கலர், வாட்டர் கலர் உள்ளிட்ட பல்வேறு கலை ஊடகங்கள் மற்றும் ஓவிய நுட்பங்களைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தி இருந்தனர். முதன்மை விருந்தினராக ஓவியர் ராம. சுரேஷ் பங்கேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர் R. பாலகிருஷ்ணன், மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். தமிழ் இலக்கியத்தின் செழுமையையும், இளம் தலைமுறையின் கற்பனை மற்றும் படைப்பாற்றலையும் ஒருங்கிணைக்கும் இக்கண்காட்சி, கலை ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்தனர். டிசைன் பள்ளியின் பயணம் குறித்து பொற்கொடி பேசினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் நஸ்ரத் பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0