திருச்சியில் 3நாட்கள் நடக்கிறது ஃபேர் புரோ கண்காட்சி செப்டம்பர் 25 ம் தேதி தொடக்கம் அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைக்கிறார்

Sep 23, 2026 - 13:09
 112
திருச்சியில் 3நாட்கள் நடக்கிறது ஃபேர் புரோ கண்காட்சி செப்டம்பர் 25 ம் தேதி தொடக்கம்  அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் 3 நாட்கள் நடக்கிறது

ஃபேர்புரோ கண்காட்சி செப்டம்பர் 25ம் தேதி  தொடக்கம்

அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைக்கிறார்

திருச்சி,

திருச்சி கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) சேர்மன் மனோகரன்,தலைவர் நசுருதீன் மற்றும் ‘பேர்புரோ கண்காட்சி 2026’ சேர்மன் இளமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முக்கியமாக வளர்ந்து வரும் நகரமான திருச்சிராப்பள்ளியில் கிரடாய், திருச்சி சார்பில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான விற்பனை கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 25, 26 மற்றும் 27 தேதிகளில் திருச்சி பழைய மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் ஃபேர்ப்ரோ 2026 என்ற பெயரில் 11 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கும் பேர்புரோ கண்காட்சியை மக்கள் இலவசமாக பார்த்து தங்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை தேர்வு செய்யலாம். பேர்புரோ–2026 கண்காட்சியை செப்டம்பர் 25ம் தேதி இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரதீக் தாயள், மாநகராட்சி கமிஷனர் என். பொன்மணி, தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். ராமசுப்பு, கிரடாய் தமிழ்நாடு சங்க தலைவர் ஹபீப், துணை தலைவர் கோபிநாதன், சங்க தேசிய நிர்வாகி ஸ்ரீதரன் ஸ்வாமிநாதன், தேசிய இணைச் செயலாளர்சுரேஷ்கிருஷ்ணாஉள்பட பலர் கலந்து கொள்கின்றனர். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது, டைடல் பார்க், திருச்சி வணிக மையம், 4 வழி சுற்று பாதைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் திருச்சி சிறந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக மக்களிடம் திருச்சியில் வீடு வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. வீடு வாங்குபவர்களுக்கு உதவும் வகையில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு (திருச்சி கிரடாய் அமைப்பு) பேர்புரோ கண்காட்சி நடக்கிறது. 1999ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிரடாய் அமைப்பு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதால் ஏராளமான மக்கள் கிரடாய் உறுப்பினர்களிடம் வீடுகளை வாங்கி பயன் அடைந்துள்ளனர். திருச்சி கிரடாய் கிளையில் 65 கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ரூ.30 லட்சத்தில் தொடங்கி ரூ. 6 கோடி வரையிலான மதிப்பீட்டில் வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியில் நடக்கும் பேர்புரோ– 2026 கண்காட்சியில் 32 கட்டுமான நிறுவனங்கள், உள் அலங்கார நிறுவனங்கள், கட்டுமான பொருள்கள் விற்பனை நிறுவனங்கள், எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், எச்.டி.எப்.சி பேங்க், உள்ளிட்ட பல வங்கிகள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. வங்கிகள் சார்பில் வீடு வாங்குவதற்கான வீட்டு கடன், நிதி ஆலோசனை வழங்கப்படுகிறது. மக்களுக்கு வீடுகள் குறித்த தொழில் நுட்ப விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய வழி முறைகள், கட்டிடத்தின் பரப்பளவை கணக்கிடுதல், சட்டப்பூர்வ ஆவணங்களை ஆராய்தல் போன்றவற்றில் கிரடாய் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. கிரடாய் அமைப்பு சார்பில் கட்டப்படும் வீடுகள் குறித்த காலத்தில் கட்டி முடிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மான்யத்துடன் அரசு அறிவிக்கும் வீடு கட்டும் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாக தெரியப்படுத்துகிறோம். இந்த அரிய வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கண்காட்சியில் வீடு புக்கிங் செய்பவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்றார். கிரடாய் உறுப்பினர்கள் சார்பில் கட்டப்படும் வீடுகள் குறித்த காலத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசின் சட்டத்திட்டதிற்கு உட்பட்டு கட்டப்படுகிறது. திருச்சிக்கு மாஸ்டர் பிளான் திட்டம் வந்துள்ளதால் நகர் மேம்பாடு அடைந்து ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் வீடுகள் அதிக அளவில் கட்டப்படும் சூழ்நிலை ஏற்படும். நம்பிக்கை, நாணயம், அர்பணிப்புடன் செயல்படும் கிரடாய் அமைப்பு சார்பில் நடக்கும் பேர்புரோ கண்காட்சியில் திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான வீடுகளை புக் செய்து கொள்ளலாம் என்றனர். நிகழ்ச்சியில் திருச்சி கிரடாய் செயலாளர் முகமது இப்ராகிம் இணை செயலாளர் முருகானந்தம், பொருளாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0