பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிடியு அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடந்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
எஸ்டிடியு அமைப்பு சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடந்தது
திருச்சி,
கார்ப்பரேட் நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க மான சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் (எஸ்டிடியு) தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் சர்க்கரை மீரான், தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் முகமது இலியாஸ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் முகமதுவாசிக்கண்டனஉரையாற்றினர். தொழிற் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார், எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி, மாநிலச் செயலாளரும் திருச்சி மண்டல தலைவருமான முகமது ரபீக், மாவட்ட துணைத் தலைவர் முஸ்தபா, மாவட்ட இணைச் செயலாளர் தமீமுல் அன்சாரி, . மாவட்ட பொருளாளர் அல்லாபகஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர் மீரா மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், நந்தகுமார், ஷேக் அப்துல்லா, முகமது நூருல் அமீன்முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஞ்சப்பூர் முஸ்தபா நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0