திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் பேரவை நிறைவுவிழா

Feb 18, 2026 - 10:50
 4
திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் பேரவை  நிறைவுவிழா

திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் பேரவை நிறைவுவிழா

திருச்சி தேசியக் கல்லூரி இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் இயற்பியல் பேரவை நிறைவுவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருச்சி அண்ணாபல்கலைக்கழகம் - பி.ஐ.டி வளாகம், இயற்பியல் துறையின் உதவி பேராசிரியர் (மூத்த நிலை) முனைவர் வி. ஆர். சர்மா துலிபாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "நானோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னேற்றங்கள்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை பேசும் போது :-நானோ அளவிலான மின்னணு சாதனங்களின் சமீபத்திய வளர்ச்சிகள், குறுகிய அளவாக்க நுட்பங்கள், குவாண்டம் விளைவுகள், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தயாரிப்பு சிக்கல்கள், வெப்ப மேலாண்மை பிரச்சினைகள், பொருள் வரம்புகள் மற்றும் நம்பகத்தன்மை சவால்கள் போன்ற முக்கிய அம்சங்களையும் விளக்கினார்.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர், முத்துராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, அறிவியல் சிந்தனை மற்றும் புதுமை ஆராய்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் டி. வி. சுந்தர் வாழ்த்துரை வழங்கினார்.இயற்பியல்பேரவையின்துணைத்தலைவர்மற்றும்இணைப்பேராசிரியர், முருகானந்தம் வரவேற்றார்.மாணவர் செயலாளர் சந்துருசிறப்புவிருந்தினரைஅறிமுகப்படுத்தினார். முதுகலைமுதலாம் ஆண்டு மாணவி சாரல் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0