ஸ்ரீ காவிரி கலை பண்பாட்டு மையம் சார்பில் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சங்கர் 32ஆண்டு கால மக்கள் சேவையைப் பாராட்டி ''சேவை ரத்னா" விருது

Aug 31, 2026 - 08:33
 25
ஸ்ரீ காவிரி கலை பண்பாட்டு மையம் சார்பில் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சங்கர் 32ஆண்டு கால மக்கள் சேவையைப் பாராட்டி ''சேவை ரத்னா" விருது

ஸ்ரீ காவிரி கலை பண்பாட்டு மையம் சார்பில்

 ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சங்கருக்கு 32 ஆண்டுகாலமக்கள்சேவையைப் பாராட்டி “சேவை ரத்னா” விருது

திருச்சி, 

 ஸ்ரீ காவிரி கலை பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் எம்7 பிளாசாவில் நடைபெற்றநிகழ்விற்குயோகரத்னா கிருஷ்ணகுமார் பழனிமுத்து ஆகியோர்தலைமைவகித்தனர்.விருதுவழங்கும்விழாவில்,ஒயிட்ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, திருச்சி கிழக்கு கிளை சேர்மன் டாக்டர் ப. சங்கரை 32 ஆண்டுகால மக்கள் சேவையைப் பாராட்டி “சேவை ரத்னா” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவில் சமூக சேவை, கலை, பரதநாட்டியம், சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக துளசி பாலசுப்பிரமணியன், ரோட்டரி கிளப் ரெயின்போ செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் கும்பகோணம் பரதநாட்டிய ஆசிரியர் வஜ்ரவேல், நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0