திருச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Aug 21, 2026 - 18:05
 76
திருச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் 20அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி

டிட்டோஜாக்அமைப்பினர்ஆர்ப்பாட்டம்

திருச்சி, 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) திருச்சி மாநகரக் கிளை சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திருச்சி உறையூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அது வரையில் டாப்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், அரசாணை எண் 243ஐ ரத்து செய்து ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் தயார் செய்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், டெட் 1, டெட் 2 தாள்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக குறைத்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர ஒருங்கிணைப்பாளர் பெர்ஜித் ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிராஜுதீன், வேளாங்கண்ணி, அமல் சேசுராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் கோரிக்கைகளில் விளக்கிப் பேசினார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஐசக், டேவிட் தாமஸ், ராக்லண்ட், காட்வின், பிரசன்னா, கீதா, ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநகரத் தலைவர் ஹக்கீம் அலி வரவேற்றார் துணைச் செயலாளர் அருண்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0