திருச்சி கார்மெல்ஸ் கல்வி குழும பள்ளி வெள்ளி விழா அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிவிழா மலர் வெளியிட்டார்

Feb 5, 2026 - 13:22
 41
திருச்சி கார்மெல்ஸ் கல்வி குழும பள்ளி வெள்ளி விழா  அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிவிழா மலர் வெளியிட்டார்

திருச்சி கார்மெல்ஸ் கல்வி குழும பள்ளி வெள்ளி விழா அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிவிழா மலர் வெளியிட்டார்

திருச்சி மாவட்டம் உறையூர் இராமலிங்க நகர் அருகிலுள்ள கார்மெல்ஸ் கல்வி குழும பள்ளியின் வெள்ளிவிழா பள்ளியின் தலைவர் தேவதாஸ் சாமுவேல், தாளாளர் பாக்ய ஜோதி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே. என்.நேரு கலந்துகொண்டு வெள்ளி விழா மலரை வெளியிட்டு பேசினார். திருச்சி தஞ்சை பேராயர் சாமுவேல் ஞானதுரை பிஷ்ஹீபர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜெயகர்செல்வராஜ், பள்ளிநிர்வாகக்குழு உறுப்பினர்கள் முனைவர் மாதவன் ராஜ்குமார், ரோஸ்மேரிமேத்யூ, ஜெபஸ்டினா செல்வின், பள்ளி செயலாளர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள், இன்னாள், மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் பள்ளி மாணவர்களின் பல்வேறுகலைநிகழ்ச்சிகளின் (பாடல் நடனம், மற்றும் நாடகம்) மூலம் தங்கள்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் செயலாளர் செல்வி சேரன் தேவதாஸ், பள்ளி முதல்வர் மனோவா,பிரேம்குமார், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1