ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் கைத்தறி விழிப்புணர்வு பேரணி கல்லூரியின் செயலர் மீனா தலைமையில் நடந்தது

Aug 10, 2026 - 13:15
 7
ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் கைத்தறி விழிப்புணர்வு பேரணி கல்லூரியின் செயலர் மீனா தலைமையில் நடந்தது

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி சார்பில் கைத்தறி விழிப்புணர்வு பேரணி கல்லூரியின் செயலர் மீனா தலைமையில் நடந்தது

திருச்சி

ஸ்ரீஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையானது 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி குறித்த விழிப்புணர்வு பேரணியை 07.08.2026 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி மற்றும் அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரியின் செயலர் முனைவர் கோ.மீனா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ.கு.சந்திரசேகரன் மற்றும் இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் பு.கெஜலெட்சுமி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியின் நவீன ஆடை தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மாணவிகள் பாரம்பரிய கைத்தறி சேலை அணிந்து, "கைத்தறி ஆடைகளை அணிவோம்! நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் மாணவிகள், கைத்தறி ஆடை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளைக் கைகளில் ஏந்தியும், கைத்தறி நெசவாளர்களின் கலைநயத்தைப் பறைசாற்றும் வகையில் வாசகங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். மேலும், நெசவாளர்களின் படைப்பாற்றலைப் போற்றும் விதமாக கோஷங்களையும் மாணவிகள் எழுப்பினர். நிறைவாக பேரணியானது, நமது பாரம்பரிய ஆடைகளை நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தொடர்ந்து நமது ஆதரவை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த சுமார் 140 மாணவிகளும் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0