2025 -2026 ஆம் ஆண்டில் ரூ 1178. கி.மீட்டருக்கு ரு 77 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் தகவல்

Jan 30, 2026 - 19:02
 6
2025 -2026 ஆம் ஆண்டில் ரூ 1178. கி.மீட்டருக்கு ரு 77 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பு  மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் தகவல்

2025 -2026 ஆம் ஆண்டில் ரூ 1178. கி.மீட்டருக்கு ரு 77 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் தகவல்

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்பொழுது திருச்சி மாநகராட்சியில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான வடிகால் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ. 32.50 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.9.07 கோடி செலவில் பணிகள் இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 23.43 கோடிக்கு ஒப்பந்த புள்ளி கூறப்பட்டுள்ளத 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது.திருச்சி மாநகராட்சி பகுதியில் 177.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 77 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட்டுள்ளது. என்று பேசினார். திமுக கவுன்சிலர் வெளிநடப்பு கூட்டம் தொடங்கியவுடன் திமுக கவுன்சிலர் ராமதாஸ் எழுந்து நின்று எனது வார்டுபணிகள் சரிவர செய்யப்படுவதில்லை.என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.நீங்கள் என்னை பழி வாங்கவில்லை வாக்களித்த எனங வார்டு மக்களை பலி வாங்குகிறீர்கள் என்று கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர் ராமதாஸ் வெளிநடப்பு செய்தார். இதற்கு மேயர் அன்பழகன் பதில் அளித்து பேசும் பொழுது அவருடைய வார்டில்ரூபாய் 33 கோடிக்கு பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது.என்ன தேவையோ அதை பற்றி பேசாமல் எதையோ பேசி வருகிறார் என்று கூறினார். பிரபாகரன் (விசிக): - எனது வார்டில் வேதாந்தரி நகர் ஒரு வழி சாலையாக உள்ளது. சாலையில் முகப்பு குடிசை பகுதியாகும். இதனை மக்கள் கடந்து செல்வது கடினமாக உள்ளது. எனவே, 17வது, 18வார்டுக்கு இடையே தடுப்புச் சுவர் உள்ளது. அதனை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்று பாதை அமைத்து தர வேண்டும். இதேபோல் சத்தியமூர்த்தி நகரில் 30க்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வீடு உள்ளது. பலர் இறந்து விட்டனர். பலர் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எனவே, அதிகாரி அதனை கண்டு தற்போது பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும். ஜவகர் (காங்) :-எடமலைப்பட்டி புதூரில் முன்னாள் நகராட்சி தலைவர் லூர்துசாமி பிள்ளை பிச்சைக்காரர்கள் மற்றும் முதியோருக்கு மறுவாழ்வு இல்லம் கட்ட 8ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு இனமாக கொடுத்தார்.அந்த இடத்தில் தற்பொழுது முதியோர் இல்லம் கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கு நான்கு முறை எம்பியாக இருந்த அடைக்கலராஜ் பெயர் வைக்க வேண்டும். மேயர் அன்பழகன் உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்யப்படும். முத்து செல்வம் (திமுக) :-லூர்துசாமி மற்றும் முன்னாள் எம்பி அடைக்கலராஜளின் பணி அளப்பரியாதது. அங்கு செயல்படும் தனியார் ஹோமில் அடைக்கலராஜ் சிலை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சங்கர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) :- சங்கியாண்டபுரம் மெயின் ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு உடைந்து உள்ள பாலத்தை சரி செய்ய வேண்டும். உக்கடை பகுதியில் கழிப்பிடம் கட்டி தர வேண்டும் .மழை நீர் வடிகாலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அரச மரத்தடி பகுதியில் மாநகராட்சி இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மண்டி சேகர் (திமுக):- அந்தப் பகுதியில் கழிவறை கட்டப்படாமல் இருக்கிறது. அதனையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மேயர் அன்பழகன்: ஆக்கிரமங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகராஜ் (திமுக):அண்மையில் மாநகராட்சியில் பல்வேறு பொறுப்புகளில்ஊழியர்களை நியமனம் செய்தீர்கள். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரிவதில்லை. எனது வார்டில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கர் திமுக மாநகராட்சி வரிகட்டும் பொழுது அலுவலகத்தில் கணிப்பொறியில் சர்வர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் செந்தில் திமுக ..சிறப்புமிகு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அலங்காநல்லூருக்கு இணையாக திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு கூட்டம் கட்ட நடவடிக்கை எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அதனை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று அதிகாரிகள் நல்ல முறையில் செயல்படதிட்டத்தை தொடங்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:-தேச பிதா காந்தி நினைவு நாளில் திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் அணையா விளக்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வார்டுகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும். விஜயலட்சுமி கண்ணன் (கோட்டத் தலைவர்):-பொதுவாக எல்லா வார்டுகளிலும்பொதுமக்கள் வார்டு அலுவலங்களில் வரி ரசீது கட்டும் பொழுது சர்வர் பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது அதனை சரி செய்ய வேண்டும். பட்டாபிராமன் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் இதேபோன்று கேஎம்சி ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது அதனை சரி செய்ய வேண்டும். தில்லைநகர் பகுதிகளில் ஏராளமான கார்கள் நிறுத்தப்படுகிறது. இந்த கார்களுக்கு பண வசூல் செய்ய வேண்டும். காஜாமலை விஜி :- அண்ணா நகரில் கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் .எஸ் எம் எஸ் காலணியில் மழைநீர் வடிகால் பணியை முடிக்க வேண்டும்.எனது வார்டில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு எனக்கு அழைப்பு விடவில்லை.அதிகாரி எனக்கு தகவல் கூறியதாக கூறுகிறார் அதனை நிரூபித்தால் நான் அடுத்த கனமே கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மேயர் மு.அன்பழகன் :அதிகாரிகள் பகுதி சபா கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் வந்து உள்ளார்களா? என்பதையும் முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் கூறுவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் இனி இது போன்ற தவறு நடக்கக்கூடாது. என்று பேசினார். மேலும் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வருடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் கூட்டத்தில் உள்ளாட்சித் துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு 3000 மற்றும் 240 நாட்களுக்கு மேல் பணிபுரியும் பகுதிநேர பணியாளர்கள் தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலாக மிகை ஊதியமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் 500 வழங்க வேண்டும்.பஞ்சப்பூரிலிருந்து கோரையாறு மற்றும் உய்யக் கொண்ட வாய்க்கால் கிழக்குக்கரை வழியாக கோணக்கரை குடமுருட்டி கரூர் பாலம் வரை புறவழி சாலை 9.90 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்க 1.80 சென்ட்பட்டா நிலத்தை கையகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0