சிறுபான்மையின மக்களுக்கு நன்மை செய்வது போல் தேர்தல் நேரத்தில் வரும் வேடதாரிகளை நம்ப வேண்டாம். திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள்

Jan 29, 2026 - 13:29
 79
சிறுபான்மையின மக்களுக்கு நன்மை செய்வது போல்  தேர்தல் நேரத்தில் வரும் வேடதாரிகளை நம்ப வேண்டாம்.  திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ  இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள்

சிறுபான்மையின மக்களுக்கு நன்மை செய்வது போல் தேர்தல் நேரத்தில் வரும் வேடதாரிகளை நம்ப வேண்டாம். திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள்.

புதுச்சேரி ந திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாடாளுமன்றத் தேர்தலோ- சட்டமன்றத் தேர்தலோ- நெருங்கிவிட்டால் ஒரு சில பேருக்கு சிறுபான்மையின மக்கள் மிது அன்பு இருப்பது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் தோழனாக- குறிப்பாக இஸ்லாமிய- கிருத்துவ மக்களின்- பாதுகாவலனாக இருக்கின்றது- இருந்து வருகின்றது- எப்பொழுதும் இருக்கும் என்ற உணர்வோடு- எல்லா சமயங்களையும் போற்றி பாதுகாக்கின்ற இயக்கமாக திமுக இருந்து வருகின்றது.. இந்த நிலையில் அதிமுக மாநில செயலாளர் சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் என்ற வேடத்தை போட்டு, சிறுபான்மையின மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதுவும் சட்டமன்ற உறுப்பினர் செய்யவில்லை என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். அந்த முயற்சி இன்றைக்கு மட்டுமல்ல- என்றைக்கும் எடுபடாது. இந்தியா முழுவதும் இன்றைக்கு சிறுபான்மையின மக்கள் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிமுகதான்.. இஸ்லாமிய மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாமல் மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அது மட்டும் இல்லாமல் இன்றைக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு உரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் தொடர்ந்து அம்மக்கலுக்காக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றேன். இவ்வாறு நிலைமை இருக்க வக்பு வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத சமயத்தில் அதற்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும் என்று ஒரு போலியான அறிவிப்பினை அந்த தர்காவில் சமாதி மேல் நின்று அதிமுக மாநில செயலாளர் சொல்வது அந்த தர்காவினை அவமானப்படுத்துகின்ற செயலாகும். அது மட்டுமில்லாமல் தனது பேச்சினிடையே சிறுபான்மையின மக்களுக்கு ஒன்றுமே சட்டமன்ற உறுப்பினர் செய்யவில்லை என்று போன்ற தோற்றத்தை அங்கு விதைக்க முற்பட்டிருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்தி தராமல் ஏமாற்றிய சட்டமன்ற உறுப்பினர்தான் தாங்கள் என சவால் விட்டு சொல்கிறேன். குறிப்பாக பெரிய பள்ளி வார்டில்உள்ள ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் குடியிருந்த100 வீட்டிற்கு எனது சொந்த செலவில் கழிப்பிட வசதி கட்டிக் கொடுத்து இருக்கின்றேன். அது மட்டும் இல்லாமல் புதிய குடிநீர் இணைப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றேன் மேலும் அம்மக்கள் வசிக்கின்ற இடங்களில் புதிய மின்மாற்றிகளை ஏற்படுத்தி எந்நேரமும் மின் வசதி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். கொரோனா காலத்திலும் மழை வெள்ளம் வந்த காலத்திலும் களத்தில் இறங்கி அம்மக்களுக்கு அடிப்படை ஆதார உதவிகளை நேரில் நின்று செய்தேன். நவீன தெருமின் விளக்குகள் அமைத்து அம் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன்.. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து கழிவுநீர் வெளியே செல்வதற்கு முகத்துவாரம் தூர் வாரி கொடுத்து இருக்கின்றேன். அம்மக்களின் கல்லறையில் குப்பை வண்டிகள் நிற்பதை தடுத்து நிறுத்தி சுகாதார முறையில் கல்லறை இருக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். தற்பொழுது வக்ஃபு வாரியத்திற்குசொந்தமான இடத்தில் இருந்த அரபிக் பள்ளியினை எந்தவித அரசு அனுமதி இல்லாமல் இடித்து குடியிருப்புகள் கட்டப்படும் என்று விண்ணப்பங்களை வாங்கி அந்த மக்களை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அரசிடம் முறையிட்டு இருக்கின்றேன். எந்தவிதமான அனுமதி இன்றி வக்ஃபு வாரியத்திற்குசொந்தமான இடத்தை அனுமதி இன்றி இவ்வாறு பயன்படுத்த நினைப்பது சட்டவிரோத செயலகம் . இந்த மோசடி பேர் வழிகளின் நடவடிக்கைகளை நான் புகார் அளித்ததன் பேரில் வக்ஃபு வாரிய நிர்வாகத்தினர் அம்மாதிரி நாங்கள் யாரும் குடியிருப்பு கட்ட அனுமதிக்க வில்லை என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்கள் .மீரா பள்ளிவாசலுக்கு சொந்தமான ஏனாம் வெங்கடாசலப்பிள்ளை வீதியில் உள்ள இடத்தில் ஏழை இஸ்லாமிய குடியிருப்பு வாசிகளுக்கு பிரச்சனை வந்த போது நானே முன்னின்று தீர்த்து வைத்து அம்மக்கள் தொடர்ந்து அவ்விடத்தில் குடியிருக்க ஏற்பாடு செய்து தந்தேன். எல்லாவற்றிக்கும் மேலாக நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து அவ்வாறு மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்க வைத்தேன்.. திடீரென்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் பாசத்தின் காரணமாக- சிறுபான்மையின மக்களுக்கு நன்மைகள் செய்வது போல் ஒரு நாடகத்தை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிருக்கிறார் .அதனை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு எல்லா சமயங்களும் தழைத்தோங்க எல்லா இன மக்களும் நிம்மதியாக வாழ எப்பொழுதும் பாடுபடுவது தான் எனது முதல் கடமை என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். தேர்தலுக்கு தேர்தல் புதிய புதிய வேஷத்தில் வருகின்ற இயக்க வேடதாரிகளை நம்ப வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன் .அது மட்டுமல்லாமல் பன்னெடுங்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு வரும் காலத்தில் கழக ஆட்சி மலரும் போது நிச்சயமாக வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் அதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்று இந்த தருணத்தில் தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0