பெரம்பலூர் தனலெட்சுமிசீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் துவக்க விழா, மாவட்ட ஆட்சியர் ஷரண்யாஅரி பங்கேற்பு

Jul 9, 2026 - 21:57
 49
பெரம்பலூர் தனலெட்சுமிசீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் துவக்க விழா, மாவட்ட ஆட்சியர் ஷரண்யாஅரி பங்கேற்பு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழக துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஷரண்யாஅரி பங்கேற்பு

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழக துவக்க விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதைத் தொடர்ந்து, நிகர்நிலைப் பல்கலைக்கழக துவக்க விழா மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2026 - 2027 கல்வியாண்டு முதலாம் ஆண்டுமாணவர்களைவரவேற்கும்விழாஇன்றுபெரம்பலூரில்மையகூட்டரங்கில்நடைபெற்றது. விழாவிற்கு,தனலட்சுமிசீனிவாசன்பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கி பேசும்போது:- பெரம்பலூர் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் இக்கல்வி நிறுவனம் கடந்துவந்தபாதையையும்தற்போதுபெற்றுள்ளநிகர்நிலைபல்கலைக்கழக அந்தஸ்து மாணவிகளின் எதிர்காலத்திற்கு எத்தகைய புதிய வாய்ப்புகளைவழங்கும்என்று பேசினார்.இன்றுநம்கல்விநிறுவன வரலாற்றில்மட்டுமன்றி,ஒட்டுமொத்த பெரம்பலூர் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில்ஒருபொன்னானநாள்.30 ஆண்டுகளுக்கு முன்னால்நாம் விதைத்த ஒரு சிறிய கல்வி விதை, இன்று ஒருபிரம்மாண்டஆலமரமாக வளர்ந்து,‘நிகர்நிலைபல்கலைக்கழகம்’என்ற உன்னத அந்தஸ்தோடு சர்வதேச அரங்கில் கால்பதிக்கும் உன்னதமான துவக்க விழா இது. கல்விஎன்பதுவசதிபடைத்தவர்களுக்கும்,நகர்ப்புறங்களுக்கும்மட்டுமேயானஒன்றாகஇருந்துவிடக்கூடாது. குறிப்பாக, நமதுகிராமப்புறப்பெண் குழந்தைகள் தரமான உயர்கல்வி கற்று,தங்களின் சொந்தக் காலில் நின்று, இந்தச் சமுதாயத்தை வழிநடத்திட வேண்டும்' என்ற ஒற்றைப் புள்ளியைத் தாரக மந்திரமாகக் கொண்டுதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். 04 இளங்கலை பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட நமது பயணம், இன்று 13 இளங்கலை பிரிவுகள், 14 முதுகலை பிரிவுகள், 7 ஆராய்ச்சித் துறைகள் என விரிவடைந்து, பல்லாயிரக்கணக்கானபெண்களின் வாழ்வை ஒளிரச் செய்துள்ளது. நமதுதரம்மற்றும்அர்ப்பணிப்பிற்குச்சான்றாகப்பல்வேறுதேசியஅங்கீகாரங்கள் நமக்குக்கிடைத்துள்ளன. தேசியமதிப்பீடுமற்றும்தரச்சான்றளிப்புக் குழுவினால் (NAAC) நமக்கு ‘A++’ என்ற மிக உயரிய தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி,இந்தியஅரசின்கல்விஅமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியலில், இந்தியாவில்உள்ளபல்லாயிரக்கணக்கானகல்லூரிகளைப்பின்னுக்குத் தள்ளி, நாம் தேசிய அளவில் 40-வது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளோம். 2023-ல் 74-வது இடம், 2024-ல் 44-வது இடம் எனத் தொடர்ந்து முன்னேறி இன்று 40-வது இடத்தை அடைந்திருப்பது, நாம் கல்வித் தரத்தில் சமரசம் செய்துகொள்வதேஇல்லைஎன்பதைக்காட்டுகிறது.மேலும்,அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறையின் DST-CURIE திட்ட ஆதரவு பெற்ற மிகச்சில மகளிர் கல்லூரிகளில் நாமும் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பல்கலைக்கழகமாக மாறியுள்ள இந்நாளில், வெறும் தத்துவக் கல்வியை மட்டும் நாம் வழங்கப் போவதில்லை. மாறிவரும் உலகிற்கு ஏற்ப, நமது மாணவிகளை சர்வதேசப் போட்டித் திறனுக்குத்தயார்படுத்திவருகிறோம். இதற்காக ஹனிவெல் (Honeywell), பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (Palo Alto Networks), மைக்ரோசாப்ட் (Microsoft Learn for Educators) மற்றும் மோங்கோடிபி (MongoDB) போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து உயர்தர 'Center of Excellence' தொழில்நுட்ப மையங்களை நம் வளாகத்தில் அமைத்துள்ளோம். சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு (AI), தரவு பகுப்பாய்வு (Data Analytics) போன்ற அதிநவீனத் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் இனி நம் மாணவிகளுக்கு மிக எளிதாகக் கிடைக்கப் பெறும். இன்று முதலாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் எனது அன்பு மாணவிகளே! நீங்கள் சாதாரணக் கல்லூரிக்குள் நுழையவில்லை; உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்திருக்கிறீர்கள். இந்த 2026-2027 கல்வியாண்டு முதல் நாம் ‘தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி’ (DSIRT) என்ற பெயரில் புதிய பரிமாணத்தில் செயல்படத் தொடங்குகிறோம். இனி வரும் ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் பொன்னான காலம். இங்குள்ள மேம்பட்ட நவீன ஆய்வக வசதிகள், பன்னாட்டு ஆராய்ச்சி மையங்கள், சிறந்த நூலகங்கள் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமது பெரம்பலூர் மண்ணில் இருந்துகொண்டே உலகமே வியக்கும் வண்ணம் விண்வெளித் துறை முதல் செயற்கை நுண்ணறிவு வரை அனைத்துத் துறைகளிலும் நீங்கள் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என்று மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யாஅரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசும்போது:-பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட வரலாற்றில் பெண்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் இது என்பதை நினைவு கூர்ந்தார். மேலும், இப்பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதிகள் வியப்பளிக்கும்வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் இந்த தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள அசுர வளர்ச்சியைப்பாராட்டினார்.சமூகத்தின்முன்னேற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும்பெண்கல்வியேமுதன்மையான அடித்தளமாகும். ஒரு நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சியும்,முன்னேற்றமும் நம்முடைய கல்வித்திறன், ஆளுமை மற்றும் திறமைகளைச் சார்ந்தே அமைந்துள்ளது."என்று குறிப்பிட்டார்.மாணவர்களுக்குக் கிடைத்துள்ள இத்தகைய சிறந்த உள்கட்டமைப்பு, பாடத்திட்டம் மற்றும்பேராசிரியர்களின்வழிகாட்டுதலைப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தனது கல்லூரிநாட்களைமாணவர்களோடு பகிர்ந்து கொண்ட ஆட்சியர் சரண்யா அரி, தானும் ஒரு காலத்தில் மாணவியாக அரங்கில் அமர்ந்து கைதட்டியவள் தான் என்றும், இன்று இந்த நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம் விடாமுயற்சிதான் என்றுகூறினார். மாணவர்கள்ஒவ்வொருவருக்குள்ளும் பாட்டு, கவிதை, நடிப்பு, விளையாட்டு, எழுத்தாற்றல் என ஏதோவொரு மறைமுகத் திறமை ஒளிந்திருக்கும். படிப்பு என்பது கற்றலின் ஒரு பகுதி மட்டுமே. வெறும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், கலை மற்றும் இதர திறன்களிலும் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரிப் பருவம் முடிந்து வேலைக்குச் சென்றால் நமக்கான நேரம் கிடைக்காது. எனவே, இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, உலக அரங்கில் உங்களை உயர்த்திக் காட்டும் வகையில் ஒரு முழுமையான ஆளுமையாக உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள வேண்டும். என்று வாழ்த்தி பேசினார். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் இளங்கோவன் வரவேற்றார். திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், வாழ்த்துரை வழங்கினார். தனலட்சுமி சீனிவாசன் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ஹாஷ்பிட்டல் டீன் விஸ்வநாதன், திருச்சி தனலட்சுமி சீனிவாசன்பல்கலைக்கழகபதிவாளர் செல்வகுமார், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மற்றும் கல்விநிறுவனங்களின்முதல்வர்கள்முனைவர்கள்,துணைமுதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள், மாணவர்களின்பெற்றோர்கள்உள்படபலர்கலந்துகொண்டனர்.முடிவில் கலை மற்றும்அறிவியல்கல்லூரி முதல்வர் கார்த்திகா நன்றி கூறினார்.,

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0