தேர்தல் விதிமீறல் வழக்கில் : திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் வழக்கு ஒத்திவைப்பு
தேர்தல் விதிமீறல் வழக்கில் : திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் வழக்கு ஒத்திவைப்பு
கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின்போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளரும், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான கருமண்டபம் பத்மநாதன் போட்டியிட்டார். அப்போது அவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தேர்தல் விதிமுறையை மீறியதாக பத்மநாதன் மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில்நடந்து வருகிறது. இன்று நீதிபதி பரம்வீர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைனையடுத்து பத்மநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக வினா எழுப்பினர். அப்போது பத்மநாதன் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.பத்மநாதன்சார்பில் அ.தி. மு.க. வக்கீல் முல்லை சுரேஷ் ஆஜரானார்.அப்போதுவழக்கறிஞர்கள் வரகனேரி சசிகுமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், சின்னத்துரை, உடையான்பட்டி எம் .கண்ணன், நிரஞ்சன், சிவசூர்யா, அருண்குமார், கோப்புபாபு, கௌசல்யா, சந்திரமோகன், உறையூர் சக்தி கிஷோர் ஆகியோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0