திருச்சி மாநகராட்சி பகுதியில் 30ந் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம், மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தகவல்
திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை 30ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருச்சி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது. இப்பணி 29.06.2026 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை, டர்பன் நீரேற்று நிலையம், நீரேற்று நிலையத்திலிருந்து, மலைக்கோட்டை, சிந்தாமணி, ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 30 ந்தேதி ஒருநாள் இருக்காது. வருகிற ஜூலை 1 ந்தேதி அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர பிரதாப் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0