திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Jun 23, 2026 - 11:51
 42
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் ஏராளமான பங்கேற்பு

 திருச்சி,

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சாவித்திரி பரமேஸ்வரி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 2008 ஆம் ஆண்டு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஓய்வூதிய உயர்வு அறிவிப்பால் அறிவிக்கப்பட்ட மாதத்தின் முதல் தேதியில் இருந்து ஓய்வூதிய உயர்வு இருக்கும். இந்நிலையில் கடந்த ஆட்சியில் ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு தற்போது புதிதாக பதிவியேற்றுள்ள புதிய அரசு ஜனவரி மாதம் முதல் உயர்த்தி வழங்க கோரி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0