முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் வழங்கினார்

Jun 21, 2026 - 18:38
 20
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் வழங்கினார்

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் 200க்கும் மேற்பட்டோர்க்கு நலத்திட்ட உதவிகள் வாரியத் தலைவர்கு.ப.கிருஷ்ணன் வழங்கினார்

 திருச்சி

 தமிழக வெற்றிக் கழக நிறூவனத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான பொதுச் செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் உத்தரவின்படி ''மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதேபோல் திருச்சி மாவட்ட தவெக தலைமை ஆலோசனையின் படி அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 35 வது இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சி தில்லை நகர் 7வதுகுறுக்குத்தெருவில் அமைந்துள்ள கார்த்திக் வைத்திய சாலாவில் நடைபெற்றது.இந்நிகழாவிற்குஅனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.திருச்சி மாநகராட்சி முன்னாள் சுகாதாரக் குழு தலைவர் தமிழரசி சுப்பையா முன்னிலை வகித்தார்.இதில் தமிழக வெற்றிக் கழக டெல்டா மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ஏழை, எளிய பொதுமக்களுக்கு 200க்கும் மேற்பட்டோருக்கு புடவை, உணவு மற்றும் இலவச மருந்துகள் வழங்கினார்.முன்னதாக டாக்டர் விஜய் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்வில் கூப்பாக்கி சிரஞ்சீவி பத்மநாதன் என் எஸ் பூபதி ஏர்போர்ட் விஜி ரஜினிகாந்த் மலைக்கோட்டை வினோத் உஸ்மான் பாபு தென்னூர் ஷாஜகான் வரகனேரி அரசு தென்னூர் ராஜா லோகேஷ் நிர்மலா சித்த மருத்துவர்கள் மதிக்குமார் கவிதா மற்றும் மனோஜ் ராஜேஸ்வரி ஜேம்ஸ் மேரி மைனாவதி மாரியம்மாள் காளீஸ்வரி ஆறுமுகம் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கே எஸ் சுப்பையா பாண்டியன் தமிழரசி சுப்பையா மற்றும் டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர் ‌.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0