அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் பங்கேற்பு!

Jun 12, 2026 - 10:44
Jun 12, 2026 - 10:46
 6
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் பங்கேற்பு!

அதிமுக செயல்வீரர்கள், ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் பங்கேற்பு !

திருச்சி,அதிமுக மாநகர் மாவட்ட பகுதி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் ஆவின் மாவட்ட தலைவருமான சி.கார்த்திகேயன் தலைமையில்நடந்தது.இந்நிகழ்வில் ஜெ.பேரவை மாநில துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சி.அரவிந்தன், மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை வி.ஐயப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.பி.பரமசிவம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் வெல்ல மண்டி ஜி.சண்முகம், ஜான் எட்வர்ட் குமார் தென்னூர் கே.அப்பாஸ் மாமன்ற உறுப்பினர் கோ.கு.அம்பிகாபதி, எம்ராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் பேசும்போது :-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதல்வராக்கி கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது,கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தவெக அரசைக் கண்டித்து தெருமுனை பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0