திருச்சி ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் திருச்சி நோயாளிகளுக்கு பெல்ஜியத்தில் இருந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை
டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில்
திருச்சி நோயாளிகளுக்கு பெல்ஜியத்தில் இருந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை
திருச்சி
டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கோவிந்த ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் முதன்முறையாக மகப்பேறியல் மற்றும் பொது (குடலிறக்க) அறுவை சிகிச்சை ஆகிய இரண்டிலும் உலகின் மிக நீண்ட கண்டம் கடந்த தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையேயான 9,730கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கி பெல்ஜியத்தின் ஜெனட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் ரம்யா வழிகாட்டுதலில் இணையதளம் மூலம் அறுவை சிகிச்சை நடந்தது.இதற்கு ""மெட்பாட் டூமாய்'என்ற ரோபோட்டை என்ற ரோபோட்டை இயக்கி 3 மணி நேரத்தில் கர்ப்பப்பை மற்றும் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ததைப் போலவே டாக்டர்கள் குழு உணர்ந்தனர்.மருத்துவத்துறையில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதன் மூலம் ஒரு நோயாளியோ, அல்லது அறுவை சிகிச்சை செய்யும் டாக்டரோ தொலைதூரத்துக்கு பயணம் செய்யத் தேவையில்லை.நவீன வகை ""ரோபோடிக்"" இணைய தள வசதியோடு இருந்தால் மட்டும் போதும்.உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.திருச்சியில் முதன் முறையாக 9ஆயிரத்து 730 கி.மீ.தொலைவில் இருந்து ""ரோபோட்டிக்"" மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதுவே முதன் முறை என்பது திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையின் சாதனை. ஆகியவற்றுக்கு இடையே இந்த இரண்டு நேரடி தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் நிகழ்த்தப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கே.கோவிந்தராஜ் மற்றும் டாக்டர் ஆர்.முத்துராமன் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் முத்துராமன், கிருஷ்ணசாமி கண்ணன், ஹேமமாலினி கோவிந்தராஜ், கருணாகரன், வெங்கட் பரத்,பால் பிரசன்னா,ஜி.விஸ்வநாதன், லட்சுமி பிரியா, உள்பட பலர் கொண்ட மருத்துவக்குழுவின் ஆதரவோடு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை டாக்டர்கள் ஜவகர் நாகசுந்தரம், முத்துராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0