முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Jun 8, 2026 - 21:49
 11
முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா திருச்சி, திருவரங்கத்தில் திமுக சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு வழங்கினார் திருச்சி,

முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி திருவரங்கத்தில் திமுக முதன்மை செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவரங்கம் மேற்கு பகுதி சார்பில் பகுதி செயலாளர் எம்.ஏ.எஸ்.மணி ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அவசர தேவைக்காக 2வீல் சேர்கள், உழைப்பால் கழகத்தை உயர்த்தும் கழக உடன்பிறப்புகளுக்கு 2 மிதிவண்டிகள், தையல் இயந்திரம், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 500 ஏழை, எளிய மக்களுக்கு ஹாட் பேக், புடவைகள், மற்றும் வேஷ்டிகள், சேலை உள்ளிட்ட 5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு அறுவை உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் அன்பழகன் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ் பகுதி செயலாளர் எம்.ஏ.எஸ்.மணி, வழக்கறிஞர் ரங்கன், ஸ்ரீரங்கம் குணா, தி.மு.ரங்கா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0