காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பற்ற நடவடிக்கை எடுக்க தமாகா விவசாய அணி கோரிக்கை

Jun 8, 2026 - 20:08
 13
காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பற்ற நடவடிக்கை எடுக்க தமாகா விவசாய அணி கோரிக்கை

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் தமாகா விவசாய அணி அரசுக்கு கோரிக்கை திருச்சி,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர்.அதேபோல் திருச்சி மாவட்ட தமாகா விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.அந்த மனுவில் மேட்டூர் நீர்மட்டம் 79 அடியாக உள்ள நிலையில் தற்போது காவேரி பாசனம், டெல்டா மண்டலமான திருச்சி,தஞ்சை, அரியலூர்,திருவாரூர்,மயிலாடுதுறை, நாகை மாவட்டம் உள்ளிட்ட குறுவை சாகுபடி விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி குறுவை விவசாயம்செய்யும்விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், குறுவை தொகுப்புதிட்டம்,வேளாண்கூட்டுறவுசங்ககடன்,விதை,உரம்போன்றவை காலத் தே விவசாயிகளை சென்றடைய அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும் போலி விதை, நெல், பூச்சி மருந்து நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போதுமாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள்அழகப்பன், ஜெகதீசன், சேகர் சந்திரசேகர் ஆகிட உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0