பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கிறிஸ்டோபர் திலக் எம்.பி.பங்கேற்பு
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி.எம்.பி பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் கிறிஸ்டோபர் எம்.பி.பங்கேற்பு
திருச்சி,
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி.எம்.பி பிறந்தநாள் வருகிற 19 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது . இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர்திலக்கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். விழாவில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இரத்ததான முகாம்,மருத்துவமுகாம்,வேலைவாய்ப்பு முகாம், தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம், பட்டிமன்றம், அன்னதானம், இலவச எழுதுகோல் உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கல் போன்ற நலத்திட்டங்கள் வழங்கி திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட பொறியாளர் அணி பிரிவு தலைவராகஇம்ரான் பதவியேற்றுகொண்டார்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்த நடராஜன் பணியிலிருந்து நீக்கியதோடு காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், ராஜா, விமல், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம்கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மார்க்கெட் பகதூர்ஷா, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், பஞ்சப்பூர் மலையாண்டி, வரகனேரி இஸ்மாயில், புத்தூர் மலர்வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் எட்வின், அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செளஸ், பத்மாவதி, கலை பிரிவு மாநில துணை தலைவர் அருள், சுப்புராஜ், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், சக்தி அபியான் மாரீஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், மாணவர் காங்கிரஸ் ஹரி, பொறியாளர் பிரிவு இம்ரான், ஜாஹிர், வார்டு தலைவர்கள் விவேக், கார்த்தி, ஹீரா, யோகானந்தம், ஆரிப், வரதாச்சாரி, முரளி, முத்துக்குமரன், பாபு, பெரியசாமி, பூபாலன், ரமேஷ், நடராஜன், மதி, செபஸ்தியார், திலிப், பெல்ட் சரவணன், அஞ்சலி தேவி, மதுரை பாண்டியன், ரவிச்சந்திரன், பாலமுருகன், சிவகுமார், பால்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0