திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி மக்கள் இடுகாடு இடத்திற்கு பதில் புதிய இடுகாடு அமைத்து தரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Nov 16, 2026 - 19:18
Nov 16, 2026 - 19:45
 170
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி மக்கள் இடுகாடு இடத்திற்கு பதில் புதிய இடுகாடு அமைத்து தரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி மக்கள்

 இடுகாடு இடத்திற்கு பதில் புதிய இடுகாடு அமைத்து தரகோரி

 மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி, 

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் எடம மலைப்பட்டி புதூர் பகுதியில் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான புது சுடுகாடு (மயான பூமி) பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது அந்த சுடுகாட்டு இடமானது பஞ்சப்பூர் குடமுருட்டி இணைப்பு சாலைக்கு உபயோகமாக உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள வெகு தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே எடமலைப்பட்டி புதூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கோரையாறு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0