வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் காவல் துறையை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

Nov 12, 2026 - 16:40
 306
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் காவல் துறையை கண்டித்து  திருச்சியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் காவல் துறையை கண்டித்து

 திருச்சியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் திலீபன். இவர் கருமண்டபத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பார்சல் கேட்டபோது, அந்த ஓட்டல் காசாளர் ஒருமையில் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஒன்று கூடி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர் மீது கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் காவல்துறையினர் உடனடி ஜாமீன் வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து இன்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த மறியல் போராட்டத்திற்கு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பி. வி வெங்கட் தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார் குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார் இரா பிரபு, மூத்த வக்கீல் சரவணன், புவனேஸ்வரி,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், இணை செயலாளர் விஜய் நாகராஜன் செயற்குழு உறுப்பினர்கள் கம்பன் ஜானி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். காவல்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0