திருச்சி வாசன் நகர் ஜமாத் நிர்வாகிகளுடன் மஜக தலைவர் மு.தமீமுன் அன்சாரி சந்திப்பு

Nov 12, 2026 - 23:19
 4
திருச்சி வாசன் நகர் ஜமாத் நிர்வாகிகளுடன் மஜக தலைவர் மு.தமீமுன் அன்சாரி சந்திப்பு
திருச்சி வாசன் நகர் ஜமாத் நிர்வாகிகளுடன் மஜக தலைவர் மு.தமீமுன் அன்சாரி சந்திப்பு

திருச்சிவாசன்நகர்ஜமாத்நிர்வாகிகளுடன் மஜகதலைவர்

மு.தமிமுன்அன்சாரி எம்.எல்ஏ.நல்லெண்ணசந்திப்பு 

திருச்சி, 

திருச்சி மாநகருக்கு பல்வேறு பணிகள் நிகழ்விற்கு வருகை புரிந்த மஜக தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி வாசன் நகர் பகுதியில் அமைந்துள்ள அர். ரஹ்மான் பள்ளிவாசல் நிர்வாகிகளை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்:- பள்ளிவாசல்என்பதுகல்விக்கூடங்களாகவும், நல்லிணக்கத்தை வளர்க்கும் மையங்களாகவும் செயல்பட வேண்டும் என்றும், இது குறித்து ஜமாத்தினர் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அருகாமையில் வசிக்கக்கூடியசகோதரசமுதாயத்தைசார்ந்தவர்களோடுநல்லிணக்கத்தைபேணிசெயல்படும்வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். பிள்ளைகளுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்றுத் தந்து அதை பின்பற்றக்கூடியவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் மனித நேயம், சகோதரத்துவம், பல் சமூக உறவுகளை பேணுதல், தனிமனித ஒழுக்கம் போன்ற ஒழுக்க நெறிகளோடு வளர்க்க வேண்டும் என்று பேசினார். முன்னதாக பள்ளிவாசலுக்கு வருகை புரிந்த மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர்தமிமுன்அன்சாரி ஜமாத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் மஜக மாநிலத் துணைச் செயலாளர் திருச்சி ஷரிப், மாநிலத் துணைச் செயலாளர் ஆத்தூர் ரஹ்மான், வர்த்தக அணி மாநில செயலாளர் பெரம்பலூர் இம்ரான், மாவட்டச் செயலாளர் பாபு பாய், மாவட்ட பொருளாளர் தர்வேஸ், மாவட்ட துணைச் செயலாளர் யாசர், அப்பாஸ், ஷேக் மைதீன், திமுக பிரமுகர் சிராஜ் ஜாவித் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0