தனியார் மயமாக்கல் நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் மௌன போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்டியும், கையில் நீதி தராசு ஏந்தி நடத்தினர்

Nov 13, 2026 - 23:21
Nov 13, 2026 - 23:24
 3
தனியார் மயமாக்கல் நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி  திருச்சியில் நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் மௌன போராட்டம்   கண்ணில் கருப்பு துணி கட்டியும், கையில் நீதி தராசு ஏந்தி நடத்தினர்

தனியார் மயமாக்கல் நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி

 திருச்சியில் நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் மௌன போராட்டம்

கண்ணில் கருப்பு துணி கட்டியும், கையில் நீதி தராசு ஏந்தி நடத்தினர்

திருச்சி

 சாலைப் பணியாளர்களின்​41 மாத பணிநீக்கக் காலத்தைச் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்துக் காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதியம் ரூ. 5,200 - 20,200, தர ஊதியம் ரூ. 1,900 வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைக்க வேண்டும். நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே பராமரிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கக் கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளராக நியமனம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி மற்றும் நிரந்தரப் பயணப்படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க திருச்சி வட்டம் சார்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டியும் கையில் நீதி தராசு உயர்த்திப் பிடித்து மௌன புரட்சி இயக்கம் நடைபெற்றது. ​இந்த இயக்கத்திற்குச் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் திருச்சி ஜீவானந்தம், புதுக்கோட்டை திரவியம், கரூர் செவந்திலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரேம்குமார் துவக்க உரை ஆற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட செயலாளர்கள் திருச்சி போஸ், புதுக்கோட்டை முத்துவடிவேல், கரூர் பாலசுப்ரமணி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட பொருளாளர் சிவசங்கர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் இளங்கோவன் நிறைவுறையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0