சாலை பணிகளுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
சாலை பணிகளுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்
நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ரெட் பாக்ஸ் ஹோட்டலில் மாநில தலைவர் திரிசங்கு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஐயப்பன், வெங்கடேசன், முத்து, கோவிந்தன், முருகேசன், சிவக்குமார்,நிம்ரோட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் திருசங்கு.... எங்களது கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
டெண்டர் முறையில் புதிய அரசன் கொள்கை முடிவை சங்கம் முழு மனதோடு வரவேற்கிறது.
வெளி மாநில ஒப்பந்ததாரர்களை கடந்த தமிழக அரசு தடுத்து மாநில ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்த பணிகளை வழங்கியது போல் புதிய அரசும் அவற்றை பின்பற்றுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
டெண்டர் முறையில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
வெளி மாநில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தகுதி இல்லாத ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் இருக்க மேற்கண்ட டெண்டர் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நெடுஞ்சாலை பணிகளை வேகமாகவும் தரமாகவும் செய்து தமிழக அரசுக்கு நற்பெயரை பெற்று தருவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நிதி விடுவிக்காமல் நிலுவையில் உள்ள ஊரக உள்ளாட்சித் துறை சாலை பணிகளுக்கான நிதியை பெற்றுத்தந்து ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் காப்பாற்ற முதல்வரையும், துறை அமைச்சரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
கிழக்கு ஆசிய போரினால் தார் விலை நூறு சதவீதம் உயர்ந்துள்ளதால் உடனடியாக அவற்றிற்கான விலை விகிதாச்சாரத்தை மத்திய அரசு வழங்குவது போல் மாநில அரசும் உடனடியாக வழங்க வேண்டும் என துறை அமைச்சரை சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என மாநில தலைவர் திருசங்கு தெரிவித்துதார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



