திருச்சி மாநகராட்சி பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை விரைவாக அகற்ற சிறப்பு குழு அமைப்பு மேயர் மு.அன்பழகன் தகவல்

Oct 25, 2026 - 19:02
 2
திருச்சி மாநகராட்சி பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை விரைவாக அகற்ற சிறப்பு குழு அமைப்பு மேயர் மு.அன்பழகன் தகவல்

திருச்சி மாநகராட்சி பகுதியில்

தேங்கி நிற்கும் மழை நீரை விரைவாக அகற்ற சிறப்பு குமு அமைப்பு

மேயர் மு.அன்பழகன் தகவல் 

திருச்சி 

 திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் , மழைநீர் அதிக அளவு வரக்கூடிய கிராப்பட்டி, அன்பு நகர், கே.கே. நகர், காஜாமலை, ரோடு, எஸ்பிஜி கல்யாண மண்டபம் சாலை, கொல்லாங்குளம் செல்லும் வாய்க்கால் ஆகிய இடங்களை மாநகராட்சி பொறியாளர்களுடன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தெரிவித்ததாவது, மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு சாலைகள் மற்றும் பொது இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர்களை மோட்டார் பம்புகள் மூலமும், மனித ஆற்றல் மூலமும் உடனுக்குடன் விரைவாக அகற்றி வருகின்றார்கள் .மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும், தேங்கி நிற்கும் மழை நீரை விரைவாக அகற்றவும், மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் பொறியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர் தலைமையில் சிறப்பு குழுக்களை அமைக்கப்பட்டு , தண்ணீர் தேங்குவதைத் தடுக்க தினசரி ஆய்வுகளை மேற்கொண்டு, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்கின்றன. ஐந்து மண்டலங்களிலும் உள்ள தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டு மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருகிறது . குறிப்பாக சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றுமாறு குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து வருகின்றன. கனமழையின் போது, ​​மோட்டார்களைப் பயன்படுத்தி தேங்கியுள்ள நீரை அகற்ற பணியாளர் பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை உடனுக்குடன் செய்து கொடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0