திருவள்ளூர் மதர்தெரசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நல்வாழ்வு அறக்கட்டளை 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
திருவள்ளூர்,மதர்தெரசாமாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நல்வாழ்வு அறக்கட்டளை
5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், மதர் தெரசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நல்வாழ்வு அறக்கட்டளை 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அறக்கட்டளை நிறுவனர் கே.தேவி ஏற்பட்டில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி கவராப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமுதசுரபி தொண்டு நிறுவனத்தலைவர் முனைவர் மு.குமரேசன் மற்றும் அவைத்தலைவரும் , மாடர்ன் & கோ உரிமையாளருமான முனைவர் ப.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, கல்விஉபகரணங்கள் , சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயங்களை வழங்கி கொளரவித்தனர். இந்நிகழ்ச்சியில் அமுதசுரபி தொண்டு நிறுவனம் தலைமை ஊடகத்துறை செயலாளரும், கொக்கரக்கோ ஓசை காலை நாளிதழ் செய்தி ஆசிரியரும், மருத்துவர் குரல் வார இதழ் இணை ஆசிரியருமான சேவாரத்னா, சமூகசேவகர், பாரதரத்னா லயன் டாக்டர் டி.கோபிநாத் சமூக சேவையில் பல பணிகளை பாராட்டி மதர் தெரசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நல்வாழ்வு அறக்கட்டளை 2026 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியர் விருதை பெற்றார். இதில் தமிழ் சமூகத்தின் சிறந்த சாதனையாளர்கள் மற்றும் சேவையை பாராட்டி, 300க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது . இதனை தொடர்ந்து சமூக சேவை, கல்வி, மருத்துவம், தொழில்முனைவு, கலை, இலக்கியம், ஊடகம், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வரும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் திருநங்கைகள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகை துறைகளில் தனது பங்களிப்பைச் செய்து சாதனையைப் பாராட்டி விருதுகளை வழங்கினார். முடிவில் சிறந்த ஆசிரியர் விருதை பெற்ற லயன் டாக்டர் டி.கோபிநாத்திற்கு விருது வழங்கிய மதர் தெரேசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நல்வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கே.தேவிக்கு நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0