திருச்சியில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தர்ணா ஏராளமானோர் பங்கேற்பு

Oct 17, 2026 - 11:50
 26
திருச்சியில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தர்ணா ஏராளமானோர் பங்கேற்பு
திருச்சியில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தர்ணா ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சியில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி

 லாரி உரிமையாளர்கள் தர்ணா ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி,

திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் அருகிலுள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் அருகில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கருணாநிதி ஈடுபட்டனர். 2023 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளை சோதனை செய்து அரசு மணல் குவாரிகளில் முறைகேடாத அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் எடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகள் செயல்படவில்லை. எனவே இத்தொழில் ஈடுபட்டிருந்த சுமார் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தமிழக முதல்வர் விசயத்தில் உடனடியாக தலையிட்டு மணல் திட்டுக்கள் அதிகளவில் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு மணல் குவாரிகளை திறந்து முறைகேடுகள் இன்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்ல ராசாமணி, தலைமை விகித்தார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் செல்போனில் பேசினார். இதுகுறித்து துறை அமைச்சருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் இன்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0