திருச்சி மாநகராட்சி 27வது வார்டில் பல்நோக்கு சேவை மையம் திறப்பு ஒப்புகை சீட்டுகளை மேயர் மு.அன்பழகன் வழங்கினார்
திருச்சி மாநகராட்சி27வது வார்டில் பல்நோக்கு இசேவை மையம் திறப்பு
ஒப்புகை சீட்டுகளை மேயர் மு.அன்பழகன் வழங்கினார்.
திருச்சி
திருச்சி, மேயர் மு. அன்பழகன், திருச்சி மாநகராட்சி மண்டலம் 5, வார்டு எண் 27, தென்னூர் கே.எம்சி மருத்துவமனை எதிரில் மாநகராட்சி பல்நோக்கு அலுவலக மையத்தில் இ-சேவை மையம் திறந்து வைத்து பார்வையிட்டு பதிவு செய்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கினார். திருச்சி மாநகராட்சி 27 வது வார்டில் பல்நோக்கு அலுவலக மையத்தில் மாமன்ற உறுப்பினர், சுகாதார அலுவலர், வருவாய் உதவியாளர் ஆகியோருக்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல்நோக்கு அலுவலக கட்டிடத்தில் பொது மக்களுக்கு தேவையான முக்கிய சேவைகள் வருவாய்த்துறை சேவைகள் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல். சமூக நலத்துறை சேவைகள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் திருமண உதவித்திட்டங்களுக்குவிண்ணப்பித்தல்,மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துதல்,பொது விநியோகத் திட்டம், ஸ்மார்ட் கார்டு தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் செய்தல், போன்றஅரசுத் துறைகள் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட இணையவழிச் சேவைகள் பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுலாம் என மேயர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் உதவி ஆணையர்வீரமுத்துக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கமால் முஸ்தபா,ராதாமற்றும் பொதுமக்கள் உள்பட பலர்கலந்துகொண்டனர் .
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0