திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றாத குடியிருப்புகளுக்கு ரூ.24,000 அபராதம் விதிப்பு மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி தகவல்

Oct 9, 2026 - 13:29
 4
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றாத குடியிருப்புகளுக்கு ரூ.24,000 அபராதம் விதிப்பு மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி தகவல்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில்

கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றாத குடியிருப்புகளுக்கு

 ரூ. 24,000அபராதம் விதிப்பு

மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி தகவல். 

திருச்சி ,

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை ஆரம்ப நிலையிலேயே அழிக்க 400 தற்காலிக கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இம்மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிளும், அனைத்து வீடுகளையும் தினமும் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கப்பட்டு அபேட்மருந்து தெளித்து , புகைமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மண்டலம் 2 மற்றும் 3, 35, 49 ஆகியவார்டுகளில்உள்ளகுடியுருப்புகளில் மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி மற்றும் செயற்பொறியாளர், சுகாதார அலுவலர்களுடன் அப்பகுதி முழுவதும் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டடு பொதுமக்களுக்கு கொசுப் புழு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தினர்.புதிதாககட்டபடும்கட்டடங்கள்,குடியிருப்புகள்ஆகியகட்டிடங்களில்மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ததில் இக்கட்டிடங்களில்டெங்குகொசுக்கள்உருவாககாரணமானஆதாரங்கள்கண்டறியப்பட்டுள்ளதால்8குடியிருப்புகளுக்கு ரூ.24000/- அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்கள் சில இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் உள்ள தற்காலிக தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழு உற்பத்தியாவதைகட்டிடஉரிமையாளர்கள்உடனடியாகஅகற்றவேண்டும்,மாநகராட்சிமூலம்அகற்றப்பட்டால்அதற்காகதொகைவசூல்செய்வதுடன், பொதுசுகாதாரசட்டத்தின்படி குற்றநடவடிக்கைஎடுக்கப்படும்.மாநகராட்சிமேற்கொள்ளும்நடவடிக்கைகளுக்குபொதுமக்கள்நலன்கருதிமுழுமையாகஒத்துழைக்கவேண்டும் என மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணிகேட்டுக்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0