கலங்கலான குடிநீர் எரியாத மின்விளக்கு என மாமன்ற உறுப்பினர்கள் சரமாரி புகார் சாலைகளை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு பேச்சு
கலங்கலான குடிநீர்,எரியாத மின்விளக்கு என மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சரமாரி புகார்
: சாலைகளை சீரமைக்கா விட்டால் மக்களை திரட்டி போராட்டம்
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு பேச்சு
திருச்சி
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் நே.பென்மணி, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் , துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நடந்த கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு :- எல்.ரெக்ஸ் (காங்கிரஸ்) : மாரிஸ் பாலம் பணி முடிவுற தாமதமாவதற்கு யார் காரணம் ? குடிநீர் கலங்க லாக வருவதற்கு என்ன காரணம்? மஞ்சத்திடல் - எல்லக்குடி உய்யக்கொண்டான் கரையில் புதிய மின் விளக்குகள் எப்போது வரும்? மேயர் அன்பழகன் : மாரிஸ் மேம்பாலப் பணிகளில் மாநகராட்சி பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது ரயில்வே துறையில் தான் பணிகள் தாமதம் ஆகிறது நீங்கள் உங்கள் கட்சி எம்பி மூலமாக ரயில்வே துறையை அணுகி பேசலாம் கலங்கலான குடிநீர் வருவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சாதிக் பாட்சா (திமுக) : திருச்சி பெரியகடை வீதியில் மழைகாலம் நெருங்கி வருவதால் வடிகால் தூர்வார வேண்டும் எனது வார்டில் துப்புரவு பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும் கள்ளத்தெரு பூங்காவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் மாமன்ற அலுவலகம் விரைவில் திறக்க வேண்டும் ஜாபார்ஷா தெரு , கள்ளத்தெரு பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) : எனது 28 வது வார்டுக்கு உட்பட்ட இனாம் தார் தோப்பில் நீண்ட நாட்களாக சாலை போடவில்லை ஆனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.வரும் சனிக்கிழமைக்குள் சாலை போடாவிட்டால் திங்கட்கிழமை பொதுமக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் மேயர் அன்பழகன் : உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் காஜாமலை விஜய் (திமுக): எனது வார்டில் மின்விளக்கு சரியாக எரியவில்லை என குற்றம் சாட்டி ஆங்கிலத்தில் பேசினார் இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ்,மதிமுக கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார்,திமுக கவுன்சிலர்கள் சீதாலட்சுமி முருகானந்தம், மஞ்சுளா பாலசுப்பிரமணியன் கமால் முஸ்தபா ,விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்பட பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் இதற்கு மேயர் அன்பழகன் பேசும்போது பாடு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0