வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் டிசம்பர் மாதம் மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றம்

Oct 5, 2026 - 20:08
 4
வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் டிசம்பர் மாதம் மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றம்
வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் டிசம்பர் மாதம் மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றம்

வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம்

திருச்சியில் டிசம்பர் மாதம் மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றம் 

திருச்சி,

வீ த லீடர்ஸ் அமைப்பின் திருச்சி மாவட்ட தன்னார்வலகளின் முதல் கலந்தாய்வு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை தஞ்சாவூர் ரோடு அருகிலுள்ள நடைபெற்றது. நிர்வாகி காசி மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் தலைமை வகித்தார். அமைப்பு பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து பொறியாளர் சிவகுமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட ''வீ த லீடர்ஸ்" சார்பில் மகளிர் காண மருத்துவ பரிசோதனை முகாம்கள் தொகுதி வாரியாக நடத்துவது, இதன் தொடக்க விழாவில் முதன்மை சேவகர் அண்ணாமலை கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது, வருகிற டிசம்பரில் அமைப்பின் மாநில மாநாட்டை அண்ணாமலை தலைமையில் திருச்சியில் வெகு விமர்சையாக நடத்துவது, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் முதல், நதிக்கரை பாதைகளை தூய்மைப்படுத்தி, படித்துறைகளைப் பயன்படுத்தி நதி வளம் போகும் பாதையில் நந்தவனங்களை அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் நிறைவற்றப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களிடம் கரு. நாகராஜன் பேசும் பது :-வீ த லீடர்ஸ் இயக்கத்தில் தற்போது வரை 21 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.50 லட்சம் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். மன்னார்குடி அருகே தரியமங்கலம் கிராமத்தில் 11 ஏக்கரில் செயற்கை காடுகள் உருவாக்கும் திட்டத்தை அக்.13 ந்தேதி அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார். விரைவில் எங்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். 3.10 கோடி பேர் விஜய் வேண்டாம், விசில் வேண்டாம் என்று வாக்களித்தனர். உண்மையான மாற்றத்தைத் தர அண்ணாமலை வருவார்.இடைத்தேர்தலில் எங்களுக்கு எந்த நிலைப்பாடும் இப்போது இல்லை என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0