திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபார கழகத்தின் 97 வது பேரவை கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டவியாபாரக் கழகத்தின்
97-வது பேரவை கூட்டம்
திருச்சி,
திருச்சிராப்பள்ளிமாவட்டவியாபாரக் கழக அலுவலகத்தில் தலைவர் "ஜே.ஜே.எல். ஞானராஜ் அரங்கில்” தலைவர்ஜே.ஜே. எல்.ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அ.ஜார்ஜ் ராய் அனைவரையும்வரவேற்றார். கூட்டத்தில் துணைத் தலைவர் ஜி.ரேன்சன்தாமஸ்ஆரோக்கியராஜ். செயலாளர்அ.ஜார்ஜ் ராய், உதவிச்செயலாளர் பா.பத்திநாதன் இயக்குநர் ப.மகாலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 2025-2026-ம் ஆண்டிற்கான அறிக்கையை செயலாளர் அ.ஜார்ஜ் ராய் தாக்கல் செய்தார்.2025-2026-ம்ஆண்டிற்கான தணிக்கைசெய்யப்பட்டவரவு,செலவுகனக்குகளைபொருளாளர்கே.டி.தனபால்சமர்ப்பித்தார்.தீர்மானங்களைஉதவிச்செயலாளர்பா.பத்திநாதன் வாசித்து ஒப்புதல்பெற்றார். 2026-2027ம்ஆண்டிற்குதணிக்கையாளராக டி.சுதாகர், ராஜ் மற்றும் சுதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் வருகிற அக்டோபர் 15 முதல் சிறு, குறு வியாபாரிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு (யுபிஐ)மற்றும் கியூ.ஆர்.கோடு பரிவர்த்த னைக்கும், குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. . ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாகவும், பெரிய வணிக நிறுவனங்களுடனான கடுமையான போட்டியின் காரணமாகவும் தங்களது தொழில் மற்றும் வணிகத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, பல வியாபாரிகள் தங்களது வணிகத்தைத் தொடர முடியாமல் அதிலிருந்து விலகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்.யு.பி.ஐ. மற்றும் கியூஆர். கோடு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து, அரசு ஆணை பிறப்பித்து சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திருச்சி மாவட்ட வியாபாரக் கழகத்தின் 97-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.. முடிவில் நிர்வாகக்குழு உறுப்பினர் இயக்குநர் ப.மகாலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0