திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி,
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் கூட்டுறவு சங்க பணியாளர்களை தரக்குறைவாக விமர்சித்த நபரை கண்டித்து திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். கெளரவ தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு அரசு அலுவலக கூ.சார்பதிவாளர், நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் ரமேஷ், துணைத் தலைவர் குழந்தை வேலு, இணைச் செயலாளர் லோகநாதன், துறையூர் மதி, கூ.சார்பதிவாளர், மாநில நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் தங்கபூமி, முன்னாள் மாநில துணைத் தலைவர் துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார். கூட்டுறவு துறை வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0