திருச்சி அல்லித்துறையில் அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டம் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் முன்னாள் அரசு தலைமை கொறடா பேச்சு
திருச்சி அல்லித்துறையில் அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டம்
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்
முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் பேச்சு
திருச்சி
, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அல்லித்துறை எம்ஜிஆர் திடலில் நடந்தது.வடக்கு ஒன்றியச் செயலாளர் எல்.ஜெயகுமார் தலைமை தாங்கினார் . தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.முத்து கருப்பன், மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் நடராஜ், ராஜகோபால், தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஏ ஜி அருண் தெற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பி சி தமிழழகன் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜார்ஜ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் சயலாளர் தர்மேந்திரன் சாத்தனூர் வாசு பாசறை சோனா விவேக் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடேசன் திருவரங்கம் ரவிசங்கர் அன்பரசு ஆகியோர் வரவேற்றுப் பேசினர். இதில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான ஆர் மனோகரன் கலந்து கொண்டு பேசுயதாவது : தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து. எடப்பாடி யார் மக்களை நேரில் சந்தித்து அதிமுகவின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு கேட்டார் அவர்கள் செல்போன்கள் மூலமாக மாய வலியை விரித்து மக்களை ஏமாற்றி விட்டார்கள் அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் முக்கியமான பிரச்சனைகள் முதல்வர் பதிலளிப்பார். ஆனால் இன்றைக்கு யார் கேள்வி எழுப்பினாலும் மூன்று அமைச்சர்கள் மட்டும் பதில் அளிக்கிறார்கள் முதலமைச்சர் பதிலளிப்பதற்கு மூன்று நாள் அவகாசம் கேட்கிறார். புனிதமான சட்டமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் அரியணையை அலங்கரித்தனர். இப்போது சட்டமன்றம் பட்டிமன்றம் போல் மாறிவிட்டது. மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பி பேசுகிறார்கள். இந்த ஆட்சியின் அவலத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் ஆகவே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெறுவார்கள் என்றார். கூட்டத்தில் மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கோபி காளிதாஸ் , தலைமைக் கழகப் பேச்சாளர் புதூர் மணி , இளம் தலைமை கழக பேச்சாளர் சி.ஐயப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் மாநில சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், மாநில ஜி பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர் விவசாய அணி துணைச் செயலாளர் பேரூர் கண்ணதாசன் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர் சின்னசாமி அவைத்தலைவர் சேவியர் பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில் நெட்ஸ் இளங்கோ, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடேசன் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சண்முக பிரபாகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி தெற்கு மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் செல்வம் பொங்குனூர் ஜார்ஜ் முன்னாள் கவுன்சிலர் வீரங்கி நல்லூர் வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் அல்லித்துறை ராஜேந்திரன் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் சயலாளர் வைரவேல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி அற்புதராஜ் சாந்தபுரம் ராஜரத்தினம் அன்பழகன் மற்றும் புங்கனூர் அன்பரசன் நாச்சி குறிச்சி நவநீதன் மணிவேல் பொதுமக்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1