உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்மலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில்
பொன்மலை பகுதியில் மரக்கன்று நடும் விழா
திருச்சி,
ஓசோன்தினத்தைமுன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர்அமைப்புசார்பில்பொன்மலை பகுதியில் மரக்கன்று நடும் விழாநடைபெற்றது.உலகஓசோன்தினத்தைமுன்னிட்டு,சுற்றுச்சூழல்பாதுகாப்புமற்றும்பசுமையைவலியுறுத்தும்வகையில்மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர்அமைப்பு சார்பில் பொன்மலை பகுதியில் மரக்கன்றுகள்நடும்விழாநடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்தது.இதில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா.கி.சதீஸ்குமார்,தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனை சுகித்தா மற்றும் சுஜித், ரயில்வே ரவி, மோகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர்ஊற்றினர்.கே.சி.நீலமேகம்:“மரங்களைஅதிகஅளவில்வளர்ப்பதுபூமியின்வெப்பத்தைகுறைக்கவும்,சுற்றுச்சூழல்சமநிலையைபாதுகாக்கவும் உதவும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருமரத்தையாவது நட்டுவைத்து,அதுமரமாகும்வரைபாதுகாக்கவேண்டும்”என்றார்.இதனைத்தொடர்ந்துமரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, அவற்றை தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஓசோன்படலம்பூமியைச்சுற்றியுள்ளவளிமண்டலத்தின்மேல்பகுதியில்அமைந்துள்ளபாதுகாப்புக்கவசமாகும். சூரியனில் இருந்து வரும் தீங்குவிளைவிக்கக்கூடியபுறஊதாக் கதிர்வீச்சின் பெரும்பகுதியை ஓசோன்படலம்உறிஞ்சி,மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. ஓசோன் படலத்தைப்பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைமக்களிடம்எடுத்துச் செல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி உலகஓசோன்தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.ஓசோன்படலத்தைபாதிக்கும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல்,சுற்றுச்சூழலுக்குஉகந்த நடைமுறைகளை பின்பற்றுதல், மரங்களைவளர்த்தல்போன்றநடவடிக்கைகள்சுற்றுச்சூழல்பாதுகாப்புக்கு துணைபுரியும் என்ற விழிப்புணர்வு கருத்துடன் விழா நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0