14ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா திருச்சியில் புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கிடையாது காவல் ஆணையர் ந.காமினி தகவல்

Sep 10, 2026 - 22:58
 93
14ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா திருச்சியில் புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கிடையாது காவல் ஆணையர் ந.காமினி தகவல்

14ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா

  திருச்சியில் புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கிடையாது

மாநகர காவல் ஆணையர் ந.காமினி தகவல் 

திருச்சி,

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் 14ந்தேதி கொண்டாடப்படுகிறது.அதே போல் திருச்சி மாவட்டத்தில் செப்.14ந் தேதி நிறுவப்படும் விநாயகர் சிலைகள் செப்.16ந் தேதி சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெறுகிறது.இந்த ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாக திருச்சி மாவட்ட சிலை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது.திருச்சி மாநகர காவல் ஆணையர் ந .காமினி தலைமை வகித்து பேசியதாவது: விநாயகர் சிலைகள் வைப்பதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகள் வருவாய் காவல்துறையினரால் அகற்றப்படும். கடந்தாண்டு வைத்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். நிகழாண்டு புதிய இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடையாது. தனியார் இடத்தில் வைக்கும் சிலை வைத்தால் உரிமையாளரிடம் தகுந்த எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும். அரசால் அனுமதித்த (பீடத்துடன் 10 அடி சிலை) உயரத்துக்கு மேல் சிலைகள் நிறுவக்கூடாது. நீர் நிலைகளை பாதிக்கும் ரசாயன வர்ணங்கள் பயன்படுத்தக்கூடாது சிலை அமைக்கப்படும் மேற்கூரை எளிதில் தீப்பிடிக்காதவாறு உறுதியான தகரம் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஆகியவற்றால் அமைக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்‌. சிலைகள் வேறு மதத்தினர் வழிபடும் வழிபாடு தளங்கள் அருகிலோ, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் அருகிலோ நிறுவக்கூடாது. களிமண் சிலைகள் மட்டுமே பூஜை ஊர்வலத்தில் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், ரசாயன சிலைகள் வைக்க, ஊர்வலம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சிலை அமைப்பாளர்கள், சிலை கண்காணிப்பு குழுவினர் பெயர், விலாசம், தொலைபேசி எண்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பூசாரிகள் பெயர், விலாசம், பூஜை நேரத்தை காவல் நிலையத்தில் குறிப்பிட வேண்டும். ஊர்வலத்தின் போது மது அருந்திவிட்டு வரக்கூடாது, பிற மத வழிபாட்டுத் தலங்களை கடந்து செல்லும் போது தகுந்த அமைதியை கடைபிடிக்க வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு சிலை அமைப்பாளர்கள் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும், மற்ற மதத்தினர் மனம் புண்படி கோஷங்கள் எழுப்பக் கூடாது, பெரிய கம்புகளில் கொடிகளை கட்டி வரக்கூடாது வெடிகள் வெடிக்க கூடாது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0