தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் திருச்சியில் வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா மாநில தலைவர் வி.ஜெ.செந்தில் , மதுரை ஆதீனம் பங்கேற்பு
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில்
திருச்சியில் வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா
மாநிலத் தலைவர் டாக்டர் வி.ஜெ. செந்தில் மதுரை ஆதீனம் பங்கேற்பு
திருச்சி,
சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் தேசிய தலைவர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது. முன்னதாக உழவர்சந்தை மைதானம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரணியாக திரண்டு வந்து வ.உ .சி .சிலையை வந்தடைந்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவரும் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்செந்தில் ஜெ. செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் 293 வது குரு மகா சன்னிதானம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் மைதீன் சுவாமிநாதன், மாநில பொருளாளர் பேராசிரியர் மாணிக்கம், மாநில அவை தலைவர் மயில்வாகனம், மாநில துணைத்தலைவர் மகாலிங்கம், மாநில செயலாளர் ரவி, மாநில துணைச் செயலாளர் மாணிக்கம், மாநில இளைஞரணி அமைப்பாளர் தங்கம் ரத்தினகுமார், மாநகர் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் பாலு, செய்தி தொடர்பாளர் வ. உ .சி. கண்ணன், நிர்வாகிகள் விக்னேஸ்வரன், ரவி, ஆனந்தராஜ், வழக்கறிஞர் கங்கை மணி, சேதுராமன், சரவணன், விஜயகுமார், செல்வராஜ், மனோஜ் குமார், ரத்தினவேல், ஸ்டாலின், முகுந்தன், முத்து, அப்பு, சத்யா, சக்திவேல், திலீப், தினேஷ் குமார், உறையூர் ரத்தினம், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திருச்சி தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழ்நாடு சோழிய வேளாளர், சங்க நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0